Published:Updated:

'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்
'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்
'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

சன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா..? நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க. 

வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.

'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

இந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார். 

'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.