Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• ``என்னுடைய அடுத்த படம் நிச்சயம் விஜய்யோடுதான்’’ என அறிவித்திருக்கிறார் மோகன்ராஜா. தற்போது தனி ஒருவன் - 2 வேலைகளில் இருக்கும் மோகன்ராஜா, அதை முடித்ததும் விஜய்யின் 64வது படத்திற்கான வேலைகளைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாவ் டீம்!

 

• இயக்குநர் சுஜித் சர்கார் படங்கள் என்றாலே அமிதாப் பச்சனுக்குக் கூடுதல் உற்சாகம் வந்துவிடும்போல. பிங்க், பிகு படங்களை அடுத்து இந்த இணை மீண்டும் இணையும் படம் ‘குலாபோ சிட்டாபோ.’ இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி செம வைரல் ஆனது. முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் அமிதாப் பச்சன் கெட்டப் மாற்றி அடையாளமே தெரியாத அளவுக்குத் தோன்றவிருக்கிறார். ``அவருடைய பாத்திரமும் அதேபோல யாருமே கணிக்க முடியாதபடி வித்தியாசமாக இருக்கும்.’’ என்கிறார் சுஜித் சர்கார். அசத்தல் அமிதாப்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• உலக அளவில் அதிக ஜனநெருக்கடி கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மும்பை. டிராஃபிக் நிறைந்த மும்பை சாலைகளில் பயணிக்கும்போது, காலியான சாலையில் செல்வதைவிட 65 சதவிகிதம் கூடுதல் நேரமெடுப்பதுதான் இந்த சாதனைக்குக் காரணம்.  தலைநகர் டெல்லி இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் ஜாமாகி நிற்கிறது. டிராபிக் இந்தியா!

இன்பாக்ஸ்


 

• அமெரிக்க டி.வி சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி ஹாசன். உலகெங்கும் படமாக்கப்படவுள்ள ‘ட்ரெட்ஸ்டோன்’ எனும் இந்தத் தொடரில் வித்தியாசமான கொலையாளி பாத்திரமாம் சின்ன ஹாசனுக்கு. ‘`இது ஆக்‌ஷன் சீரிஸ் என்பதால் ஏகப்பட்ட பயிற்சிகள் கொடுத்துவருகிறார்கள். எனக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க ரொம்பப் பிடிக்கும் என்பதால் இந்த சீரிஸில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்ருதி. அடி... தூள்!

 

• அவதாரின் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் எண்டுகேம்’ படம் முறியடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்க... அவெஞ்சர்ஸால் கடைசிவரை அவதாரை முந்த முடியவில்லை. அதுக்காக சும்மா இருக்க முடியுமா... வரலாறு முக்கியமில்லையா... எனவே இப்போது மீண்டும் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தை ரீரிலீஸ் செய்யவிருக்கிறது மார்வெல்.  ஷூட் செய்யப்பட்டு, படத்தில் சேர்க்கப்படாத சில சீன்களைச் சேர்த்து, ‘எக்ஸ்டென்டட் வெர்ஷன்’ என வெளியிடப்போகிறார்களாம். அல்டிமேட் அவதார்!

இன்பாக்ஸ்

• உலக அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் `லயன்கிங்.’ அனிமேஷனாக வெளியாகிச் சக்கைப்போடு போட்ட படம். இப்போது லைவ் ஆக்‌ஷனில் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இந்தப்படத்தின் இந்தி டப்பிங்கில் பிரதான பாத்திரங்களான மகன் சிங்கம் சிம்பாவுக்கும் அப்பா சிங்கம் முஃபாசாவுக்கும் குரல் கொடுக்கப் போவது ஷாருக்கானும் அவர் மகன் ஆர்யனும். சிங்கம் டபுளா வருது!

 

• பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் உரிமை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம் படக்குழு. விஜய் டி.வி-யில் போடுவாங்க!

• ‘என் ஸ்லோகனைத் திருடிவிட்டார்’ என ரன்வீர் சிங்குக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ரெஸ்லிங் சூப்பர்ஸ்டார் ப்ராக் லெஸ்னர்.  ‘ஈட்... ஸ்லீப்... கான்கர்... ரிப்பீட்’ என்கிற ப்ராக் லெஸ்னர் வசனத்தைக் கொஞ்சம் மாற்றி, `ஈட் ஸ்லீப் டாமினேட் ரிப்பீட்’ என்று எழுதி, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவோடு செல்ஃபி எடுத்து ட்வீட் செய்திருந்தார் ரன்வீர். இதை எதிர்த்துதான் ப்ராக் லெஸ்னரின் மேனேஜர் பால் ஹெய்ன்மேன் இப்போது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கிறார். மல்யுத்தம்... சட்ட யுத்தம்!

இன்பாக்ஸ்


 

• `செர்னோபிள்’ வெப்சீரிஸ் மெகா ஹிட் ஆனதை அடுத்து, செர்னோபிள் பகுதியே சுற்றுலாத்தலம்போல மாறிவிட்டது. பலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நின்றுகொண்டு, சிதிலமடைந்த பொருள்களைக் கைகளில் வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துப் போட்டு ஜாலி போஸ்ட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். இதனால் ரொம்பவே கோபமாகிவிட்டார் வெப்சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான கிரெய்க் மஸீன். “அது ஒரு விபத்து நடந்த பகுதி. அங்கே ஒரு வருந்தத்தக்க அசம்பாவிதம் நடந்திருக்கிறது. மனிதர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். விவஸ்தை கெட்டவர்கள்!

 

• ஜாம்பியாவின் ஏழைக் குழந்தைகளுக்கு உதவ UNICEF நடத்திய சேரிட்டி கால்பந்துப் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணியும் Rest of the World XI அணியும் மோதின. ஓய்வுபெற்ற பிரபல கால்பந்து வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், World XI அணிக்காகத் தடகள வீரர் உசேன் போல்ட்டும் கலந்துகொண்டார். போட்டியில் பங்கேற்றது மட்டுமன்றி, பிரபல இங்கிலாந்து டிஃபெண்டர் ஜேமி காரகருக்கு டிமிக்கி கொடுத்து ஒரு கோலையும் போட்டு எல்லோரையுமே ஆச்சர்யப்படுத்தினார். கோல்டன் லெக்ஸ்!

இன்பாக்ஸ்

• ஆசியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் டாப் டென் தேர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது ட்ராவலர்ஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் தாஜ்மகாலைப் பின்னுக்குத் தள்ளி, பத்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது தாராவி சேரிப்பகுதி. வெளிநாட்டுப் பயணிகளில் பலரும் தாஜ்மகாலைவிட தாராவியின் குறுகலான சந்துகளையும், அங்கே வசிக்கும் ஏழை மக்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் சுற்றிப்பார்க்கிற ஸ்லம் டூர்களைத்தான் விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது இந்த நிறுவனம். கொடுமை!