Published:Updated:

சினிமா விமர்சனம்: தும்பா

சினிமா விமர்சனம்: தும்பா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்: தும்பா

சினிமா விமர்சனம்: தும்பா

சினிமா விமர்சனம்: தும்பா

சினிமா விமர்சனம்: தும்பா

Published:Updated:
சினிமா விமர்சனம்: தும்பா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்: தும்பா

பாட்டி சொல்லும் காட்டு ராஜா கதையை வி.எஃப்.எக்ஸ் வழியே சொன்னால் அதுதான் ‘தும்பா.’

சினிமா விமர்சனம்: தும்பா

ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை கிடைக்கிறது தீனாவுக்கு. உதவிக்காகத் தன் நண்பன் பயந்தாங் கொள்ளி தர்ஷனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார் தீனா. அங்கே புலியை அதன் வாழ் விடத்தில் வைத்து போட்டோ எடுப்பதற்காக ஹீரோயின் கீர்த்தி பாண்டியனும் வந்து சேர்கிறார். அதேசமயம், கேரள வனப்பகுதிக்குள்ளிருந்து தமிழக வனப்பகுதிக்குத் தன் குட்டியோடு வருகிறது தும்பா என்னும் புலி. ஒருபக்கம் அதை வேட்டையாடத் துடிக்கும் சிலர், மறுபக்கம் போட்டோவுக்காக அதைத் தேடித் திரியும் இந்த மூவர்... இந்த மனிதக் கூட்டத்தால் புலிக்கு என்ன ஆனது என்ற வி.எஃப்.எக்ஸ் விளையாட்டுதான் தும்பா.

ஹீரோவாக தர்ஷன். சிரித்தால் அழகாக இருக்கிறார். அதற்காகக் கடைசிவரை சிரித்துக்கொண்டே இருப்பதுதான் மைனஸ். உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் பல கிரேடுகள் முன்னேற வேண்டும். நாயகியான கீர்த்திபாண்டியன் முக்கால்வாசி காட்சி களில் தேறிவிட்டாலும் ஆங்காங்கே மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. கன்ட்ரோல் ப்ளீஸ்!

படத்தை முதல் காட்சியிலிருந்து இறுதிவரை இழுத்துப்போவது தீனாதான். டைமிங் கவுன்ட்டர்கள், நக்கல் பாடி லாங்குவேஜ் என வரும் காட்சிகள் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். ‘ரெட்டை அர்த்த வசனங்கள்தான் காமெடி’ என்றாகிவிட்ட நிலையில், அவரும் பாலாவும் குழந்தைகளை மனதில்வைத்துக் கிச்சுகிச்சுமூட்டுகிறார்கள். கவுண்டமணியின் மேனரிசத்தைக் குறைத்துக்கொண்டு தனக்கான ஸ்டைலை தீனா சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம்: தும்பா

அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி - ஆளுக்கொரு பாடல் இசையமைத்திருந்தாலும் ‘புதுசாட்டம்’ மட்டுமே புதுசாக இருக்கிறது. சில ஃப்ரேம்களில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை பிரமிப்பூட்டும் விதத்தில் காட்டித் திகைக்கவைக்கிறார் ஒளிப்பதிவாளர் நரேன் இளன்.

அடுத்த தலைமுறைக்குக் கானுயிர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றதற்காக இயக்குநர் ஹரீஷ் ராமைப் பாராட்டலாம். ஆனால் புலிகளின் அவசியத்தைப் பேசிவிட்டு அடுத்த காட்சியிலேயே நடுக்காட்டில் குடி, ஆட்டம்பாட்டம் பாடல் ஏன் சார்?

வி.எஃப்.எக்ஸ் குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டினாலும் மற்றவர்களுக்கு பிளாஸ்டிக் தன்மையைப் பரிசளிக்கிறது.

காமெடி ஒர்க் அவுட் ஆன அளவிற்கு மற்றகாட்சிகள் எடுபடவில்லை. புலியைப் பற்றிய படத்தில் புலி மிகச்சில காட்சிகளே வர, மனிதர்கள்தான் வளவளவெனப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதனாலேயே படம் நீளமாகத் தோன்றுகிறது.

இலக்கில்லாமல் பாய்வதை இழுத்துப்பிடித்து, குறிவைத்துப் பாய்ந்திருந்தால் புலிப்பாய்ச்சலாகி யிருக்கும் ‘தும்பா.’

- விகடன் விமர்சனக் குழு