Published:Updated:

``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்

``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்
``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்
``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்

`களவாணி’, `தூங்காநகரம்’, `வாகைசூடவா’, `கலகலப்பு’, `மாப்ள சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சென்னை விருகம்பாகத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் தன் நண்பரைத் தங்கவைக்கச் சென்றபோது அங்கிருந்த கன்னட நடிகர் ஒருவருடன் கைகலப்பாகி, தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து விமலிடம் பேசினேன்.

``சித்தப்பா தவறிட்டதால ஊருக்குப் போயிட்டேன். போன் வந்துகொண்டே இருந்தால் கவனிக்க முடியாது. எங்க சித்தப்பாருக்கு ஒரே ஒரு பெண்தான். அதனால நான்தான் எல்லாத்தையும் எடுத்துக்கட்டி பண்ண வேண்டியிருந்தது. அதனால் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். அடுத்த நாள் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனால், முக்கியமான ஆட்களிடம் முன்னாடியே சொல்லிட்டுத்தான் வந்தேன். மூன்று நாள் காரியம் முடிந்துதான் போக வேண்டுமென்று சொல்லிட்டாங்க. கொட்டுச் சத்தம் அது இதுனு டிஸ்டர்பா இருக்கும். இந்தப் பிரச்னை குறித்து நான் சென்னை வந்து பேசிக்கிறேன்னு சம்பந்தப்பட்ட இயக்குநர்கிட்ட சொல்லிட்டுத்தான் ஊருக்கு வந்தேன். அதுக்குள்ள என்னென்னமோ செய்தி வந்துடுச்சு. சென்னைக்கு வந்துதான் எல்லாத்தையும் விரிவா பேச வேண்டும்’’ என்றவரிடம், `என்னதான் நடந்தது?’ எனக் கேட்டதற்கு, 

``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்

``ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி இருக்கும். ஊரிலிருந்து சித்தப்பா தவறிட்டாருனு போன் வந்தது. என் நண்பர் ஒருவர் வந்திருந்தார். நாங்கள் குடும்பத்தோடு ஊருக்குக் கிளம்புவதால், என் நண்பரைத் தங்க வைக்க ஹோட்டலுக்குப் போனோம். யாராவது வந்தால், போனால் அந்த கெஸ்ட் ஹவுசில் ரூம் போட்டுக் கொடுப்பது வழக்கம். அதனால் இரவு ஒரு மணி இருக்கும் அங்கிருக்கும் மேனேஜருக்கு போன் அடிக்கிறேன். ரிங் போகுது அவர் போன் எடுக்கல. 

சரி வீட்டிலிருந்து போகிற வழியில்தானே இருக்குனு நாங்களும் நேரடியாகப் போயிட்டோம். மேனேஜர் இருந்தால் பார்ப்போம், இல்லனா வேற ஹோட்டல்ல தங்க வைப்போமென்று முடிவு பண்ணினோம். சரி எதற்கும் தெரிந்தவர்தானே கதவைத்தட்டிப் பார்ப்போம்னு நேராப் போனேன். அங்க எல்லாம் இந்திக்காரப் பசங்கதான் வேலை பார்ப்பார்கள். கார் பாக்கிங்கிட்ட இரண்டு, மூன்று சேர் இருக்கும். அங்க ஆபீஸ் பாய்ஸ் உட்கார்ந்திருப்பாங்க. 

``நான் தலைமறைவாகலை; நடந்தது இதுதான்..!’’ - நடிகர் விமல் விளக்கம்

`ஹே கியா பாய். ஆபீஸ்ல யாரும் இருக்காங்கலா’னு கேட்டேன். உடனே எமோஷல் ஆகிட்டாப்ல. `என்ன ஏய்னு சொல்ற... நான் உன் சர்வன்டா’னு கேட்க ஆரம்பிச்சிட்டார். `ஏய் தம்பி இருப்பா... இருப்பா ஏன் ஆவேசப்படுற? இந்திகாரப் பையனா இருக்கிறதால் ஏய் பையானுதானே கேட்பார்கள். அப்படித்தான் நானும் கேட்டேன்’னு சமாதானமாப் பேச முயற்சி பண்ணேன். ஆனால், அவரோ அதையே திரும்ப திரும்பக் கேட்கவும், என் பக்கத்தில் இருக்கவங்களும் ஏன் இப்படி டென்ஷன் ஆகுறேனு கேட்டாங்க. நான் அவரை உட்கார வைத்துக் கேட்டும் திரும்பத் திரும்பக் கோபப்பட்டார். 

அப்படிப் பேசிட்டு இருக்கும்போது அங்கிருந்தவங்களோடு கொஞ்சம் கைகலப்பு ஆகிடுச்சு. அதுக்குள்ள மேனேஜர் எல்லாம் வந்துட்டாங்க. `விடுங்கள் அவன் ஏதோ போதையில் இருக்கான் போல'னு சொன்னாங்க. அவன் போதையில இருக்கிறதா அவங்கதான் சொல்றாங்க. கடைசியா நான் போதையிலப் போய் அடிச்சதா சொல்றாங்க. நான் போதையில் இல்லை.

அதுக்கு இப்படியாங்க சண்டைக்கு வருவாங்கனு சொன்னதும், மறுபடியும் அடிக்க வராங்க. நான்தான் சண்டை பெருசாகிடப் போகுதுனு சமாதானப்படுத்தினேன். ஊருக்குப் போகணும் என்கிற அவசரத்தில் அந்த இடத்திலியிருந்து கிளம்பிட்டேன். இதை எல்லாம் முழுக்க முழுக்க சொல்லிட்டு வந்த விஷயம். அதற்கப்புறம் இப்படி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க' என்றவர். `அவர் நடிகரா என்பதெல்லாம் தெரியாது. ஆபீஸ் பாய்களிடம்தான் நான் பேசினேன். நாளை சென்னைக்கு வந்துதான் எல்லா விளக்கங்களையும் தரணும்'' என்று முடித்தார் நடிகர் விமல்.