Published:Updated:

‘சர்வதேச கவனத்தை சென்னை பக்கம் திருப்பியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்!’- ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்

‘சர்வதேச கவனத்தை சென்னை பக்கம் திருப்பியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்!’- ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்
‘சர்வதேச கவனத்தை சென்னை பக்கம் திருப்பியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்!’- ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்

சர்வதேச அளவில் நடைபெற்ற ``வேர்ல்டு பெஸ்ட்' ரியாலிட்டி டேலன்ட் ஷோவில், இந்தியா சார்பாகப் பங்கேற்று,  டைட்டிலை வென்றிருக்கிறார் தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம். உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்று, லிடியன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றுள்ளார். அவர் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி. லிடியனை ஊக்குவிக்கும்பொருட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போது பேசிய ரஹ்மான்," லிடியன் தற்போது சர்வதேச கவனத்தை சென்னை இசைக்கலாசாரம் பக்கம் திருப்பியிருக்கிறார். இவரைப் பயிற்றுவித்தற்குப் பெருமைகொள்ளும் அதேவேளையில், லிடியனின் தந்தையைப் பாராட்டி ஆக வேண்டும். தன் பிள்ளையை சர்வதேச அளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். 

சினிமாக்களில் என்னோடு அவர் இசையமைப்பதைவிட, வெவ்வேறு உயரங்களைத் தொட வேண்டும். அவருள் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். நம் நாட்டில் வசதிகள்  இல்லை என்ற புகார் இருக்கு. அதேநேரத்தில், ஒரு விதையை விதைச்சு, அது செடியா, மரமா வளர்க்க முடியும்கிறமாதிரி, ஒவ்வொரு மனுஷனாலயும் யாரோ ஒருத்தரை இன்ஸ்பயர் பண்ணமுடியும். நாங்க இன்னைக்கு இதை  இசைத் துறையில் பண்ணியிருக்கோம். இதேபோல சினிமா, அரசியல், தொழில்துறையில பண்ணலாம். உலகெங்கும் நடக்கும் விஷயங்கள், நம்மை  'ஏன்டா வாழ்றோம்னு தோணவைக்குற நேரத்துல' லிடியன் மாதிரி ஆள்கள் செய்வது வாழ்க்கையை வாழ நம்பிக்கையளிக்கிறது" என்றார்.