Published:Updated:

``காங்கிரஸ்கிட்ட இதை எதிர்பார்க்கல" - மோடி 'ட்ரோல்' மாதவன் காட்டம்!

``காங்கிரஸ்கிட்ட இதை எதிர்பார்க்கல" - மோடி  'ட்ரோல்' மாதவன் காட்டம்!
``காங்கிரஸ்கிட்ட இதை எதிர்பார்க்கல" - மோடி 'ட்ரோல்' மாதவன் காட்டம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. சீன அதிபருடன் மோடி உரையாடும் வீடியோவை ட்ரோல் செய்து காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்துள்ள நடிகர் மாதவன், ``இது மிகவும் தவறான விஷயம். என்னதான் இரு கட்சிகளிடையே இருக்கும் அரசியல் கொள்கைகள் மாறுபட்டாலும் கருத்துகள் முரண்பட்டாலும் நம் நாட்டின் பிரதமரை இவ்வாறு சித்திரிப்பது தவறு. நகைச்சுவை என்ற பெயரில், சீன நாட்டின் முன் நம்மை அசிங்கப்படுத்துவதுபோல் இருக்கிறது. அதை, காங்கிரஸ் கட்சி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை எதிர்பார்க்கவில்லை" என்று விமர்சித்தவர் நரேந்திர மோடி. ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்களை டேக் செய்து அந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இவர் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாரயணனின் பயோபிக்கை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.