Published:Updated:

சாய்னா நேவால் பயோபிக் - ஷ்ரத்தா கபூர் விலகலுக்கு என்ன காரணம்?

சாய்னா நேவால் பயோபிக் - ஷ்ரத்தா கபூர் விலகலுக்கு என்ன காரணம்?
சாய்னா நேவால் பயோபிக் - ஷ்ரத்தா கபூர் விலகலுக்கு என்ன காரணம்?

இந்திய சினிமாவின் இப்போதைய டிரெண்ட் பயோபிக் படங்கள்தான். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என தொடர்ந்து சினிமா, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதித்து வரலாற்றில் தனக்கான ஓரிடத்தைப் பிடித்த பிரபலங்களின் பயோபிக் படங்களின் அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில், இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறை எடுக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதில் சாய்னா நேவால் ரோலில் ஷ்ரத்தா கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அதற்காக சாய்னாவின் பயிற்சியாளர் கோபிசந்திடம் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். ஆனால், அதற்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளவும் தன்னுடைய முந்தைய படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க சில காலம் அவருக்குத் தேவைப்பட்டது. இயக்குநர் அமோல் குப்தே இயக்க, பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திலிருந்து ஷ்ரத்தா கபூர் விலகியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படம், வரும் தவாணுடன் 'ஸ்ட்ரீட் டான்ஸர்', பிரபாஸுக்கு ஜோடியாக `சாஹோ', `பாகி 3'  என அடுத்தடுத்து பெரிய படங்களுக்கான பணிகளில் ஷ்ரத்தா பிஸியாக இருந்ததால் இந்தப் படத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாததே காரணம் என தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, சாய்னா நேவாலின் கதாபாத்திரத்தில் நடிக்க பர்னீதி சோப்ரா ஒப்பந்தமாகி இருக்கிறார். அதை படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் அதற்கான பயிற்சியில் ஈடுபட இருக்கிறார், பர்னீதி. இந்த வருடத்துக்குள் படத்தை முடித்து 2020-ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.