Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

•  மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலா பால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜெயராமுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவருடைய கால்ஷீட் இறுதியாகும் பட்சத்தில், ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் அவரும் கலந்துகொள்வார்.

மிஸ்டர் மியாவ்

• கே.வி.ஆனந்த் இயக்கி முடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தில் சூர்யா, மோகன்லால், சயீஷா, ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு ‘பந்தோபஸ்த்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி-யின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ தயாரிப்பில், மூன்றா வது முறையாக ஹீரோவாக நடிக்கிறார், ‘ஹிப் ஹாப்’ ஆதி. ஷங்கரின் உதவி இயக்குநர் ராணா இயக்க விருக்கும் இப்படத்தின் வேலைகள் தற்போது தொடங்கியிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பை விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

• அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டையைக்  கேட்க, ‘என்னை அடையாளம் தெரியல?’ எனப் புருவம் உயர்த்திருக்கிறார். பாதுகாப்பு அதிகாரியோ, கண்டிப்பாக அடையாள அட்டையைக் காட்டச்சொல்லி கேட்க, அதைக் காட்டியபின்பே அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், ஜெய். இது இவருக்கு 25-வது படமாகும். எஸ்.ஏ.சி-யின் 70-வது படமான இதில், ஜெய்க்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா, முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, மாதவனுடன் இணைந்து நடித்திருக்கும் ‘சைலன்ஸ்’ படத்தை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு.

மிஸ்டர் மியாவ்

• ‘பார்ட் டூ’ படம் பல்வேறு பிரச்னைகளால் தள்ளிப்போவதால், மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் பிரமாண்ட இயக்குநர். இதற்கிடையில், மூன்றெழுத்து உச்ச நடிகரை வைத்துத் தன் அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கலாம் என்ற முடிவில் இருக்கிறார், இயக்குநர்.

• நான்கெழுத்து வாரிசு நடிகர் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவதற்காகவே ஈ.சி.ஆர் பகுதியில் பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார்.

• ட்விட்டரில் எப்போதும் சமூகக் கருத்துகளைத் தெளித்துவரும் நடிகர், தற்போது ஹாலிவுட் படமொன்றில் சிங்கத்துக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். சிங்கத்துக்கு இவருடைய டப்பிங் குரல் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்க்க, வருத்தத்தில் இருக்கிறார், நடிகர்.