Published:Updated:

மே இறுதியில் அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' ரிலீஸ்!

சனா
மே இறுதியில் அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' ரிலீஸ்!
மே இறுதியில் அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' ரிலீஸ்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம்  'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் ரிலீஸான 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இதில் அஜித் தவிர வித்யா பாலன், ஷர்தா ஶ்ரீநாத் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர். தமிழுக்காக, ஒரிஜினல் வெர்ஷனிலிருந்து சில மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை தமிழில் எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்து வந்த அஜித் வேறொரு புதிய இயக்குநருடன் இந்தப் படத்தில் கைகோத்துள்ளார். இதனாலேயே இந்தப் படத்தை ஆர்வமாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். இந்தியில் பாடல்கள் இல்லாமல் ரிலீஸான இந்தப் படம் தமிழில் பாடல் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, பா.விஜய் சமீபத்தில் ஒரு காதல் பாட்டை அஜித்துக்காக எழுதி முடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படம் மே 1-ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் மே மாத இறுதிக்கு தள்ளிப் போகிறதாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.