Published:Updated:

ஹைதராபாத்தில் நடந்து முடிந்த விஷாலின் நிச்சயதார்த்தம்!

சனா
ஹைதராபாத்தில் நடந்து முடிந்த விஷாலின் நிச்சயதார்த்தம்!
ஹைதராபாத்தில் நடந்து முடிந்த விஷாலின் நிச்சயதார்த்தம்!

நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பிறகே தனக்கு திருமணம் எனக் கூறிவந்த நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம், இன்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது. 

தமிழில் முன்னணி நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால், எப்போதும் பரபரப்பாக இயங்கிவருபவர். இதுவரை கோலிவுட் சினிமாவில் சிங்கிளாக வலம்வந்த விஷாலின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

சில வாரங்களுக்கு முன்பு, ஆந்திரா நடிகை அனிஷா ரெட்டியைக் காதலிப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் விஷால். இவர்களின் நிச்சயதார்த்தம், இன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. அனிஷா 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். இருவருக்குள்ளேயும் எப்போது காதல் மலர்ந்தது என்று பலரும் யோசித்துவரும் வேளையிலேயே, இருவருக்கும் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என நிச்சயிக்கப்பட்டுள்ளது. விழாவில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த சுந்தர் சி, குஷ்பு, மனோபாலா, குட்டிபத்மினி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். 

நிச்சயத்தில் எடுக்கப்பட்ட விஷால்-அனிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் சங்கக் கட்டடப் பணிகளும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..