Published:Updated:

`ஏ புள்ள', `மில்க் வொயிட்'னு விஜயகாந்த் சார் என்னைக் கிண்டல் பண்ணுவார்!" - நடிகை ரூபிணி நாஸ்டாலஜி

கு.ஆனந்தராஜ்
`ஏ புள்ள', `மில்க் வொயிட்'னு விஜயகாந்த் சார் என்னைக் கிண்டல் பண்ணுவார்!" - நடிகை ரூபிணி	நாஸ்டாலஜி
`ஏ புள்ள', `மில்க் வொயிட்'னு விஜயகாந்த் சார் என்னைக் கிண்டல் பண்ணுவார்!" - நடிகை ரூபிணி நாஸ்டாலஜி

மிழ் சினிமா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், ரூபிணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். தன் நடிப்புப் பயணம் குறித்துப் பேசுகிறார், ரூபிணி.

``தமிழ் சினிமாவில் குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையாகிட்டேன். என் படங்களின் ரிலீஸ் தேதிக்கு முந்தின நாள், படத்தின் ரிசல்ட் எப்படி அமையும்னு நினைச்சுப் பதற்றமாகிடுவேன். இரவு முழுக்கத் தூங்காம வீட்டுக்குள்ளேயே நடந்துகிட்டு, சிந்திச்சுகிட்டு இருப்பேன். ஷூட்டிங் இல்லாதபோது, தியேட்டருக்கு மாறுவேடத்துல போவேன். அப்போ எனக்குச் சுத்தமா தமிழ் தெரியாது. தமிழ் கத்துக்க, ஒரு புக் வெச்சு தினமும் படிப்பேன். `குட் மார்னிங்' என்பதற்கான தமிழ் அர்த்தத்தைத்தான் முதலில் கத்துகிட்டேன். அதை நேரிடையா மொழி பெயர்த்து, `நல்ல காளை'னு நான் அழுத்தமா சொல்ல, பலரும் சிரிப்பாங்க. சிலர் அதிர்ச்சியாவாங்க. பிறகு, 'காளை' என்பதுக்கு ஜல்லிக்கட்டு மாடுனு உதாரணம் சொன்னாங்க. 

நான் விஜயகாந்த் சார்கூட அதிக படங்களில் ஜோடியா நடிச்சேன். மொழிப் பிரச்னையால், எங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் வரும். அதனால, `ஏ புள்ள', 'மில்க் வொயிட்'னு அடிக்கடி என்னைக் கிண்டல் பண்ணுவார். குறிப்பா, இந்திய சினிமாவின் 75-ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்துச்சு. அதில் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாருடன் இணைந்து, விழாவின் தொடக்க நிகழ்வாக நானும் குத்துவிளக்கை ஏற்றிவெச்சது மறக்க முடியாத நிகழ்வு. மும்பையில் வசிக்கிறேன். சினிமாவிலிருந்து விலகிப் பல வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கேன். சமீபத்தில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில கலந்துக்க சென்னை வந்திருந்தேன். அப்போ நீண்ட நாளைக்குப் பிறகு சினிமா நண்பர்களைச் சந்தித்துப் பேசினேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

டாக்டர், டான்ஸர் லட்சியம், ஆறாம் வகுப்பில் ஹீரோயின், ரூபிணி பெயர் மாற்றம், ஐந்து ரூபாய் அபராதம், அப்பா எடுத்த அந்த முடிவு, சேவை... ரீ-என்ட்ரி... டான்ஸ், ஜெயலலிதாவுடனான சந்திப்பு உட்பட தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறார், ரூபிணி. நாளை வெளியாகவுள்ள அவள் விகடனில், `எவர்கிரீன் நாயகிகள்' என்ற தொடரில்.