Published:Updated:

`அனபெல்' மூன்றாவது பாகத்தின் டைட்டில் இதுதான்! - ஜூன் ரிலீஸ்

தார்மிக் லீ
`அனபெல்' மூன்றாவது பாகத்தின் டைட்டில் இதுதான்! - ஜூன் ரிலீஸ்
`அனபெல்' மூன்றாவது பாகத்தின் டைட்டில் இதுதான்! - ஜூன் ரிலீஸ்

ஹாலிவுட்டின் டிரேட் மார்க் பேய் படம் `தி கான்ஜூரிங்'. அதில் வரும் அந்தப் பொம்மையை யாராலும் மறக்க முடியாது. அதை வைத்தும் அதில் நடக்கும் சம்பவங்களை வைத்தும் எடுக்கப்பட்ட படம்தான், `அனபெல்'. இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. 

இரண்டு படங்களுக்கும் உண்டான கதை தொடர்பே ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். கான்ஜூரிங் படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்தப் பொம்மையை வைத்துதான் `அனபெல்' படத்தின் கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர். `தி கான்ஜூரிங்' படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான். இவர்தான் 'ஸா' படத்தை இயக்கியவர்.

ஹாலிவுட்டில் இருக்கும் தனித்துவ இயக்குநர்களுள் இவரும் ஒருவர். அனபெல் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இதன் மூன்றாவது பாகத்துக்கு `Comes Home' என்று டைட்டில் வைத்துள்ளனர். `ப்ளட் மங்கி', `அனபெல்', `தி நன்', `இட்' போன்ற படங்களை தயாரித்த கேரி டௌபர்மேந்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுதான் இவரின் இயக்கத்தில் வரும் முதல் படமும்கூட. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள். படம் வரும் ஜூன் 28-ம் தேதி வெளியாகிறது.

தார்மிக் லீ