Published:Updated:

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

`அழகன்', `ரோஜா', `இருவர்', `செங்கோட்டை', `ஜென்டில்மேன்', `மிஸ்டர் ரோமியோ' என 90-களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர், நடிகை மதுபாலா. தனது சினிமா அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

`அழகன்', `ரோஜா', `இருவர்', `செங்கோட்டை', `ஜென்டில்மேன்', `மிஸ்டர் ரோமியோ' என 90-களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர், நடிகை மதுபாலா. தனது சினிமா அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார் நடிகை மதுபாலா. கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்குப் பிறகு `அக்னி தேவ்' படத்தில் நடித்திருக்கிறார். அவரிடம் பேசினோம். 

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

``வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கிட்டிருக்கேன். வர்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன். எத்தனையோ நல்ல படங்கள்ல சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கேன். ஆனா, இதுவரை ஒரு விருதுகூட வாங்காதது, எனக்கு ஒரு குறையா இருக்கு. அந்தக் கேள்வி என்னைத் துரத்தினப்போதான், மீண்டும் நடிக்கலாம்னு களமிறங்கியிருக்கேன்!" மதுபாலா சொல்லும்போது, அவர் வார்த்தைகளில் அத்தனை வலிமை. 

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

``இந்த உலகத்திலேயே கஷ்டமான வேலை எதுனு கேட்டா, நடிப்பைத்தான் சொல்வேன். அதுதான் சிறந்த வேலையும்கூட!. காரணம், அதுமூலமா நாம பல கேரக்டர்களை வெளிப்படுத்த முடியும். சமூகத்துல பிரதிபலிக்க முடியாத கேரக்டர்களையும் சினிமா மூலமா பண்ணலாம். அப்படிப் பல வித்தியாசமான படங்களில் நடிக்கணும்னு எனக்கு எப்போவுமே ஆசையிருக்கு. `அக்னி தேவ்' படமும் அப்படித்தான்! இப்படி ஒரு கேரக்டரை ரியல் லைஃப்ல பார்க்க முடியாது. சினிமா மூலமா பார்க்கப்போறீங்க... இப்போவே பலபேர் `அக்னி தேவ்' டிரெய்லரைப் பார்த்துட்டு என்னைப் பாராட்டுறாங்க. என் ரியாக்ஸன்ஸ் அவ்ளோ தரமா இருக்குனு சொல்றாங்க." என்றவர், தொடர்ந்தார். 

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

``ஒரு பாட்டியா நடிக்கச் சொன்னா, அந்தக் கேரக்டரா மாறிடுவேன். பதினைந்து வயசுப் பொண்ணா நடிக்கச் சொன்னாலும், முடிஞ்ச அளவுக்கு அதை பெஸ்ட்டா கொடுக்க நினைப்பேன். நல்ல கேரக்டர் எதுவா இருந்தாலும் இதுவரை அதுக்கெல்லாம் நான் நோ சொன்னதில்லை. அதேமாதிரி, வர்ற எல்லாக் கதைகளையும் ஓகே பண்ணியதுமில்லை. நடிகை ஶ்ரீதேவி `சத்மா'வில் (மூன்றாம் பிறை) பண்ணது மாதிரியும் என்னால நடிக்க முடியும். அவர் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்." என்றவரிடம், நடிப்பு என்ற பாதையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? என்றோம். 

``பாலசந்தர் சார்தான் எங்கேயோ என் போட்டோவைப் பார்த்துட்டு, `அழகன்' படத்துல நடிக்க அழைத்தார். அந்த டைம்ல இயக்குநர் குக்கு கோலியும் (kuku kohli) அவர் படத்துல நடிக்க அழைத்திருந்தார். ரெண்டுபேரையும் தட்டிக் கழிக்காம, ஒரே நேரத்துல ரெண்டு படத்திலும் நடிச்சு முடிச்சேன். `அழகன்', `Phool Aur Kaante' - இந்த ரெண்டு படங்களுக்குப் பிறகு அப்படியே பிக்கப் ஆகிட்டேன். பொதுவாகவே, நான் இதைத்தான் பண்ணுவேன், அதைத்தான் பண்ணுவேன். எனக்கு இவர்தான் ஜோடியா இருக்கணும், இவங்கதான் மேக்கப் பண்ணணும்... இப்படியெல்லாம் கேட்கிற ஆள் கிடையாது. சினிமா பின்புலத்துல இருந்து வந்ததுனால, எனக்கு சினிமாவை எப்படி அணுகணும்னு தெரியும். நடிகை ஹேமமாலினியின் உறவினர் நான். சின்ன வயசுல இருந்தே டான்ஸ், போட்டோ ஷூட், டைரக்டர்ஸ் மீட்டிங்... இதையெல்லாம் பார்த்திருக்கேன்.  

என் அம்மா, பரதநாட்டியக் கலைஞர். வழுவூர் ராமையா பிள்ளையின் (Vazhuvoor B. Ramaiyah Pillai) சிஷ்யை. நிறைய அரங்கேற்றம் பண்ணியிருக்காங்க. எனக்கும் அம்மாதான் நடனம் கத்துக்கொடுத்தாங்க. அப்போதான், எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. எனக்குக் கூச்ச சுபாவம் அதிகம். அதனால, ஆரம்பத்துல கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருந்தேன். பாலசந்தர் சார் அந்தத் தயக்கத்தை உடைச்சு, நடிக்க வெச்சார்.'' என்றவரிடம், ஐந்து வருட இடைவெளி குறித்த காரணத்தைக் கேட்டோம்.

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

``இவ்வளவு நாள்களாக குடும்பம், குழந்தைகள் என இருந்துட்டேன். இந்தச் சமயத்துல எனக்கு நடிக்கணும்னு தோணலை. நடிப்புமேல இருக்கிற ஆசை சும்மா விடுமா, திரும்ப இழுத்துட்டு வந்துடுச்சு. கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ் தானா அமைஞ்சிருக்கு. இந்த இடைவெளியில எனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் குறையா தெரிஞ்சது. அது, எனக்கான அங்கீகாரம். நான் நல்ல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, இதுவரைக்கும் ஒரு விருதுகூட வாங்கலையே! அந்தக் குறையைத் தீர்த்துக்கத்தான், இப்போ மறுபடியும் நடிக்கக் களமிறங்கியிருக்கேன். இந்தத் துறையில நான் ஒரே ஒரு விருது வாங்குனா போதும்! நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, `அக்னி தேவ்' படத்துல நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கன்னடத்தில் `பிரீமியர் பத்மினி' படம் ரிலீஸ் ஆகப்போகுது. இதுல ரொம்ப மாடர்ன் ரோல்ல நடிச்சிருக்கேன். எனக்கு மெச்சூர்டான ஒரு காதல் கதையில நடிக்கணும்னு ஆசை." 

"அந்த வருத்தம்தான் மீண்டும் தீவிரமா நடிக்கக் காரணம்!" - மதுபாலா

`` `அக்னி தேவ்' எப்படி வந்திருக்கிறது?" 

``நம்ம நாடு இப்போ அரசியல் ரீதியா சென்சிட்டிவா இருக்கு. தவிர, அரசியல் கதைகளை எடுத்தாலே, அது ஆளும் கட்சியைக் குறை சொல்ல எடுக்கிறாங்கனு கிளப்பி விட்டுட்றாங்க. இந்தப் படத்துல அப்படியெல்லாம் இல்லை. கமர்ஷியலான ஒரு பொலிடிகல் படம் இது."

``குடும்பம் பற்றி?''

``எனக்கு அமீயா (Ameyaa), கெய்யா (Keia) என அழகான இரண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. ரெண்டுபேரும் படிப்புல கவனமா இருக்காங்க. கணவர் ஆனந்த் ஷா (Anand Shah). வேலையில பிஸியா இருந்தாலும், வீட்டைப் பார்த்துக்கவும் தவறமாட்டார். அன்பான குடும்பம் எங்களுடையது. நான் சென்னைப் பொண்ணாச்சே... எனக்குத் தமிழ் ரசிகர்கள் அதிகம். நான் எங்கிருந்தாலும், தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்களையும் மறக்க முடியாது."