Published:Updated:

விஜய் சேதுபதி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு!

சந்தோஷ் மாதேவன்
விஜய் சேதுபதி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு!
விஜய் சேதுபதி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு!

'சரவணன் மீனாட்சி' ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கிவருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியான 'கனா' படத்தைத் தொடர்ந்து, இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படம், இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ளது.

விஜய் சேதுபதி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிப்பு!

ஏற்கெனவே, இந்தப் படம்குறித்த சில செய்திகள் அவ்வப்போது கசிந்துகொண்டிருந்தன. படத்தின் பெயர் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்றும் தகவல்கள் பரவிவந்தன. இந்தப் படத்தின் டைட்டில், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த டைட்டில் அறிவிப்பின் சிறப்பம்சமே அதன் வீடியோ வடிவம்தான். கடந்த மாதம் வெளியாகி வைராலான 'சூப்பர் டீலக்ஸ்' பட ட்ரெய்லரைப் போலவே இந்தப் பட வீடியோ இருந்தது. 'ஒரு நாள் ஒரு ஆள்..' என விஜய் சேதுபதி ஒரு கதையை மீண்டும் மீண்டும் சொல்வதுபோல, 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரெய்லர் இருந்தது. அதைப் போலவே இந்தப் படத்துக்கான கதையையும், டைட்டில் வைப்பதில் இருந்த சிக்கல்களையும் ஒரு கதையாக 'பிளாக் ஷீப்' டீமின் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் சொல்வதுபோல, இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோ உள்ளது.

சந்தோஷ் மாதேவன்