Published:Updated:

நயன்தாராவின் 'ஐரா' படத்திற்கு அதிகாலை 5 மணி ஷோ?!

தார்மிக் லீ
நயன்தாராவின் 'ஐரா' படத்திற்கு அதிகாலை 5 மணி ஷோ?!
நயன்தாராவின் 'ஐரா' படத்திற்கு அதிகாலை 5 மணி ஷோ?!

சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம், 'ஐரா'. இந்தப் படம் வரும் வாரம் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், சென்னையில் காலை 5 மணி ஷோவும் போடப்படும் என்றும் பேசப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை ஜே.ஜே.ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. 

சத்யராஜ் நடிப்பில் வெளியான 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சர்ஜூன். இவரது இரண்டாவது படம்தான் 'ஐரா'. நயன்தாரா, இதில் பவானி மற்றும் யமுனா என்னும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார். மேலும்,  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29-ம் தேதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, 'ஐரா' படம் வெளியாகிறது. சுதர்சன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், 28-ம் தேதி அதிகாலை 5 மணி ஷோவில் திரையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

பெரிய ஹீரோக்களின் படங்களைத்தான் அதிகாலை 5 மணிக்கு திரையிடுவார்கள். சிறிய பட்ஜெட் படங்களுக்கும், சிறிய ஆர்டிஸ்ட் படங்களுக்கு அதிகாலை  5 மணி ஷோ திரையிடுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' படம் காலை 5 மணி ஷோ திரையிடப்பட்டது. இதற்காக விஷ்ணு விஷாலும், ஆர்.ஜே.பாலாஜியும் ட்விட்டரில் காரசாரமாகப் பேசிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, 'ஐரா' படமும் காலை 5 மணிக்கு திரையிடப்படலாம் என பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. 

தார்மிக் லீ