Published:Updated:

ஹேய்... லவ்லி பிளாக்கி நயன்தாரா! - `ஐரா' டிரெய்லர்

அலாவுதின் ஹுசைன்
கலிலுல்லா.ச
ஹேய்... லவ்லி பிளாக்கி நயன்தாரா! - `ஐரா' டிரெய்லர்
ஹேய்... லவ்லி பிளாக்கி நயன்தாரா! - `ஐரா' டிரெய்லர்

`சூப்பரா இருக்குற படத்த மொக்கணு சொல்லணும்; பிரைம் மினிஸ்டர கழுவிக் கழுவி ஊத்தணும்; எது நடந்தாலும் இலுமினாட்டிதான் காரணம்னு சொல்லணும்' என்று யூ-டியூப் சேனல்களை கலாயக்கும் வகையில் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


`விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படம் ஐரா. இந்தப் படத்தை `லக்‌ஷ்மி', `மா' குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தையும் இயக்கிய கே.எம்.சர்ஜுன் இயக்குகிறார். `இந்தப் படத்தில், முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தவிர, கலையரசனும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படத்துக்கு, ஜோகேஷ் கார்த்திக் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள `மேகதூதம்' என்ற பாடலில் இடம்பெற்ற இவரது தோற்றமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளது. இவரது அப்பாவித்தனமான முக பாவனைகளைக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. மாயா, டோரா படங்களைப் போன்று இப்படம் ஹாரர் அட்வெஞ்சர் ஜானரில் தயாராகவுள்ளது. படம் இம்மாதம் 28ம் தேதி வெளியாகிறது.