Published:Updated:

`எ ஸ்டோரி ஆஃப் டாக்' - வெளியானது ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் டிரெய்லர்!

அலாவுதின் ஹுசைன்
`எ ஸ்டோரி ஆஃப் டாக்' - வெளியானது ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் டிரெய்லர்!
`எ ஸ்டோரி ஆஃப் டாக்' - வெளியானது ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் டிரெய்லர்!

‘சர்வம் தாளமயம்' படத்திற்குப் பிறகு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள 'வாட்ச்மேன்' படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார், சம்யுக்தா ஹெக்தே, யோகி பாபு, 'முனிஷ் காந்த்' ராம் தாஸ், ராஜ் அர்ஜுன் , சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷுடன்  நாய் ஒன்றும் நடித்துள்ளது. ஒரு நாய், கொள்ளைக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ளும் முதலாளியை எப்படி காப்பாற்றுகிறது என்பது படத்தின் கதையாகத் தெரிகிறது.  பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், தங்களது ட்விட்டர் கணக்கில் ‘சவுக்கிதார்'(மக்கள் பாதுகாவலன்) எனப் பகிர்ந்துவருகிறது. இந்நிலையில், படத்தின் நாய் ஒன்று, நானும் சவுக்கிதார்தான் என்கிற வாசகத்தை ஏந்தி நிற்பதுபோல இருந்த போஸ்டர் சமீபத்தில்  வைரலாகியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்  இசையில் உருவாகியுள்ள படத்தின் ஒளிப்பதிவை நிரவ் ஷா மேற்கொண்டுள்ளார். ஆண்டனி படத்தொகுப்பில் படம், வரும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

'குப்பத்து ராஜா', 'அடங்காதே', '100% காதல்', 'ஐங்கரன்', '4ஜி', ரைசாவுடன் 'காதலிக்க யாருமில்லை', சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் 'சிவப்பு மஞ்சள் பச்சை' ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளன. 

அலாவுதின் ஹுசைன்