Published:Updated:

தெரியுமா உங்களுக்கு? - இன்று ``ரஜினிகாந்த்" கொண்டாடுவது 45-வது பிறந்தநாள் #Rajinikanth

எம்.குணா

1975-ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், சிவாஜிராவ். தமிழ்சினிமாவில் ஏற்கெனவே சிவாஜி நடித்துக் கொண்டிருப்பதால் அறிமுக நடிகரான சிவாஜிராவ் பெயரை எப்படி மாற்றி வைப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். கோடைக்காலம் அது சென்னையில் இருக்கும் வடஇந்திய ஆண்கள், பெண்கள் எல்லோரும்  விதவிதமான வண்ணங்களைப் பூசிக்கொண்டு ஹோலிப்பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். சிவாஜிராவை அருகில் அழைத்த கே. பாலசந்தர் 'இன்னையில இருந்து  உன் பெயர் ரஜினிகாந்த் டா' என்று உரக்கச் சொல்லி உச்சிமோந்து ரஜினியை கட்டியணைத்துக் கொள்கிறார்.

தெரியுமா உங்களுக்கு? - இன்று ``ரஜினிகாந்த்" கொண்டாடுவது 45-வது பிறந்தநாள் #Rajinikanth

அன்றுமுதல் ஒவ்வொரு ஹோலிப்பண்டிகையின் போதும் ரஜினிக்கு உற்சாக ஊற்று பெருக்கெடுக்கும். குடும்பத்தாரோடு வண்ணம்பூசி தன் பிறந்தநாளையும், ஹோலிப்பண்டிகையையும் குதூகலமாகக் கொண்டாடுவார்.  ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தன் குருநாதர் கே. பாலசந்தருக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை,  ராஜம் அம்மாளுக்குப் பட்டுப்புடவை தவறாமல் கொடுத்து அனுப்பிவிடுவார்.  தன் வீட்டில் வந்த பட்டுவேஷ்டியை பார்த்தவுடன் பாலசந்தர் குஷியாகிவிடுவார் 'ரஜினி வீட்டுக்குப் போன் போடுடா..' என்று சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டு எதிர்முனையில் இருக்கும் ரஜினியோடு சந்தோஷம் பொங்க உரையாடுவார். இன்று உலகம் முழுக்க ஹோலிப்பண்டிகை  ரஜினிகாந்துக்கோ  45-வது பிறந்தநாள் விழா.  

தெரியுமா உங்களுக்கு? - இன்று ``ரஜினிகாந்த்" கொண்டாடுவது 45-வது பிறந்தநாள் #Rajinikanth