Published:Updated:

ஹோலி கொண்டாடும் 'அவெஞ்சர்ஸ்' தானோஸ்! - வைரலாகும் புகைப்படம்

தார்மிக் லீ
ஹோலி கொண்டாடும் 'அவெஞ்சர்ஸ்' தானோஸ்! - வைரலாகும் புகைப்படம்
ஹோலி கொண்டாடும் 'அவெஞ்சர்ஸ்' தானோஸ்! - வைரலாகும் புகைப்படம்

மார்வெல் காமிக்ஸில் அதிரிபுதிரி ஹிட் அடித்த படம், 'அவெஞ்சர்ஸ்'. இந்த வரிசையில் உருவாகி இருக்கும் `அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை  அந்தோணி ரூஸோ, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். இப்படம், வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தில் நடித்த ஜோஷ் ப்ரோலின் (தானோஸ்), தற்போது புரொமோஷன் வேலைகளுக்காக மும்பை வந்ததோடு, ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

ஹோலி கொண்டாடும் 'அவெஞ்சர்ஸ்' தானோஸ்! - வைரலாகும் புகைப்படம்

ராபர்ட் டௌனி, கிறிஸ் ஈவன்ஸ், மார்க் ரஃபல்லோ, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் என ஏராளமான  நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம், அவெஞ்சர்ஸ். இவர்களின் நிஜப் பெயர்களைவிட கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொன்னால்தான் அடையாளம் தெரியும். அந்த அளவிற்கு அவெஞ்சர்ஸ் படத்தின் சூப்பர் ஹீரோக்களாகவே வாழ்ந்திருப்பார்கள். வெவ்வேறு படங்களில் நடித்திருக்கும் மார்வெல்லின் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக சங்கமித்து, உலகிற்காக சண்டையிடும் இடமும் படமும்தான் அவெஞ்சர்ஸ்.

இந்த சூப்பர் ஹீரோக்களை எப்படி மறக்க முடியாதோ, அதுபோல இந்தப் படத்தின் வில்லனான தானோஸையும் மறக்க முடியாது. 'கார்டியன் ஆஃப் தி காலக்ஸி' படத்தில் வில்லனாக அறிமுகமானவர், அவெஞ்சர்ஸ் படத்தின் ஒட்டுமொத்த கற்களையும் சேகரித்து, அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் துவம்சம் செய்வதோடு, 'இன்ஃபினிட்டி வார்' படம் முடியும். அதில், தானோஸ் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நிஜப் பெயர், ஜோஷ் ப்ரோலின். படம், வரும் ஏப்ரல் இறுதியில் வெளியாவதால், இந்தியாவில் படத்தின் புரொமோஷன் வேலைக்காக வந்திருக்கும் இவர், 2013 அன்று இந்தியாவில் எடுத்த புகைப்படத்தை, 'ஹேப்பி ஹோலி. இந்தியா 2013' என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல்! 

தார்மிக் லீ