Published:Updated:

``அரசியல்ல நம்ம தலையிடணும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!" - `உறியடி 2' டீசர்

``அரசியல்ல நம்ம தலையிடணும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!" - `உறியடி 2' டீசர்
News
``அரசியல்ல நம்ம தலையிடணும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!" - `உறியடி 2' டீசர்

``அரசியல்ல நம்ம தலையிடணும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!" - `உறியடி 2' டீசர்

சூர்யா தயாரிப்பில் விஜய் குமார் இயக்கி நடிக்கும் படம், `உறியடி 2'. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்ற நிலையில், படத்தின் டீசரும் இன்று வெளியாகியிருக்கிறது. 

``அரசியல்ல நம்ம தலையிடணும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!" - `உறியடி 2' டீசர்

கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் சாதிய பிரச்னைகளைப் பற்றிப் பேசிய படம், `உறியடி'. அந்தப் படத்தில் நடித்த விஜய் குமார்தான் இந்தப் படத்தை இயக்கினார். ``சமூகப் பிரச்னையை எதிரொலிக்கும் விதமா என்னுடைய படம் இருக்கணும்னு முடிவு பண்னேன். நானே தயாரிப்பாளர் என்பதால், பேசத் தயங்கும் சாதி அரசியலைப் பேசலாம் என முடிவெடுத்தேன். தவிர, அரசியல் படம் என்றாலே மினிஸ்டர், சி.எம் ரேஞ்சில் யோசித்து கதை எழுதுவாங்க. ஆனா, யதார்த்தத்தில் அப்படி இல்லை. ஊருக்குள் இருக்கும் சிறிய சாதிக் கட்சிகள், பெரிய பெரிய கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அந்த சாதிக் கட்சிகளின் பின்புலத்தைப் பெருசுகளுக்குச் சொல்றதுக்குப் பதிலா, இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லணும்னு முடிவெடுத்தேன். `உறியடி' உருவானது!'' என்று உறியடி முதல் பாகம் சமயத்தில் பேசியிருந்தார். இரண்டாம் பாகத்திற்குப் பெரிய புரொடக்‌ஷன் பேனர் என்பதால் படத்தைப் பெரிய அளவில் கொண்டு போயிருப்பது டீசரைப் பார்த்தாலே தெரிகிறது. மேலும் படத்தில் அரசியல், போராட்ட களம் போன்ற பல விஷயங்களைப் பேசியிருப்பதும் தெரிகிறது. படம் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz