Published:Updated:

ஆரம்பமானது என்.ஜி.கே படத்தின் டப்பிங்; ஒரு வாரத்தில் ரிலீஸ் அப்டேட் - குஷியில் சூர்யா ரசிகர்கள்

தார்மிக் லீ
ஆரம்பமானது என்.ஜி.கே படத்தின் டப்பிங்; ஒரு வாரத்தில் ரிலீஸ் அப்டேட் - குஷியில் சூர்யா ரசிகர்கள்
ஆரம்பமானது என்.ஜி.கே படத்தின் டப்பிங்; ஒரு வாரத்தில் ரிலீஸ் அப்டேட் - குஷியில் சூர்யா ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `NGK'. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர், இணையத்தில் சக்கைப்போடு போட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் மேலும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதைப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்க, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் போன்ற ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதற்குப் பிறகு இவர் நடிக்கத் தொடங்கிய படம் `என்.ஜி.கே'. செல்வராகவன் இயக்கத்தில் டிரீம் வாரியர்ஸ் பேனரில் இந்தப் படம் உருவாகத் தொடங்கியது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து படத்திற்கான டப்பிங் ஆரம்பித்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், ரிலீஸ் தொடர்பான செய்தியும் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார். புதுப்பேட்டை படத்தைப் போல் இந்தப் படமும் அரசியல்தான் களம். அதே சமயம் செல்வா இயக்கிய புதுப்பேட்டை படம், சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. 

தார்மிக் லீ