Published:Updated:

ஜி.வி.பிரகாஷின் `குப்பத்து ராஜா'வுக்கு 'U/A' சான்றிதழ்!

தார்மிக் லீ
ஜி.வி.பிரகாஷின் `குப்பத்து ராஜா'வுக்கு 'U/A' சான்றிதழ்!
ஜி.வி.பிரகாஷின் `குப்பத்து ராஜா'வுக்கு 'U/A' சான்றிதழ்!

பாபா பாஸ்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம், `குப்பத்து ராஜா'. படத்திற்கு இவரே இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `சர்வம் தாளமயம்'. ராஜீவ் மேனன் இயக்கிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவர இருக்கிறது. மேலும், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் படம், `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாலக் லல்வானி, பூனம் பாஜ்வா போன்றவர்களும் இதில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். எஸ் ஃபோக்கஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில்தான் வெளியானது. மேலும், ரைஸாவுடன் ஜோடி சேரும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என்ற டைட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.