Published:Updated:

``எவ்வளவு முறை அடித்தாலும் மீண்டு வருவான்!" - ரத்தம் தெறிக்கும் `ஜான் விக்' டிரெய்லர்

தார்மிக் லீ
``எவ்வளவு முறை அடித்தாலும் மீண்டு வருவான்!" - ரத்தம் தெறிக்கும் `ஜான் விக்' டிரெய்லர்
``எவ்வளவு முறை அடித்தாலும் மீண்டு வருவான்!" - ரத்தம் தெறிக்கும் `ஜான் விக்' டிரெய்லர்

ஹாலிவுட் நடிகரான கீனு ரீவ்ஸை நமக்கு மாட்ரிகிஸ் படத்திலிருந்துதான் தெரியும். இவர் நடிப்பில் வெளியான ஜான் விக் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல ஹிட்டடித்தது. இதன் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. 

``எவ்வளவு முறை அடித்தாலும் மீண்டு வருவான்!" - ரத்தம் தெறிக்கும் `ஜான் விக்' டிரெய்லர்

2014-ல் இவரது நடிப்பில் வெளியான `ஜான்விக்'. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017-ல் வெளியானது. அதுவும் செம ஹிட். அதற்குப் பின் மூன்றாவது பாகத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாகத்திற்கு `Parabellum' என்று டைட்டில் வைத்துள்ளனர். `ஒரே ஒரு நாய். ஒரே ஒரு கார். நாயைக் கொன்றதற்காகவும், காரை அழித்ததற்காகவும் பலி வாங்கும் ஹீரோ' இதுதான் படத்தின் ஒன்லைன். அதிலிருந்து பயணிக்கும் கதை தொட்டு வெவ்வேறு பரிமாணங்களுக்குச் செல்லும். நடிகர் என்பதைத் தாண்டி பல சமூகத் தொண்டுகளையும் ஆற்றி வருகிறார், கீனு ரீவ்ஸ். துப்பாக்கி, சண்டை, பலிவாங்கல் என ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒவ்வொரு காட்சியும் நகரும். யூடியூபில் வெளியான இந்த டிரெய்லர் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. படம் வரும் மே மாதம் வெளிவர இருக்கிறது. 

தார்மிக் லீ