Election bannerElection banner
Published:Updated:

``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி
``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

``அப்பாவின் குரலைக் கேட்டால் கண்கலங்கிடுவேன்!" - மலேசியா வாசுதேவன் மகள் பிரஷாந்தினி

றைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தினி. பின்னணிப் பாடகியான இவர், `முன்தினம் பார்த்தேனே (வாரணம் ஆயிரம்)', `அய்யயோ நெஞ்சு (ஆடுகளம்)' உட்பட, பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரின் இசைப் பயணம் குறித்துப் பேசினோம். உற்சாகமாகப் பேசினார்.

``பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் நிறைய பின்னணி பாடிக்கிட்டிருந்தேன். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எங்க குடும்ப நண்பர். அவர் படங்களில் பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கேன். என் குரல் பொருத்தமா இருக்கும்னு நினைச்சா, நிச்சயம் எந்த இசையமைப்பாளரா இருந்தாலும் பாட வாய்ப்பு கொடுப்பாங்க. நாமளா போய் தொடர்ந்து வாய்ப்பு கேட்டுகிட்டே இருப்பது சரியா இருக்காது. என்னைத் தேடி வரும் வாய்ப்புகளுக்கு, நல்ல முறையில் பாடுறேன். சன் டிவி `அபூர்வ ராகங்கள்' சீரியலின் டைட்டில் பாடலை இசையமைச்சிருந்தேன். சினிமாவில் ஹிட் பாடல்கள் பாடி சில வருஷங்கள் ஆகுது. ஆனாலும், என்னைத் தேடி நல்ல வாய்ப்புகள் வரும்னு உறுதியா நம்புறேன். அப்படித்தான், நான் உட்பட பல திறமையான பாடகர்களும் எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு எப்போ வேண்ணாலும் வரலாம். வரும் நேரத்தில் அதற்கு உரியவர்களாக நாம இருக்கணும். அதனால்தான், தினமும் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டே இருக்கேன். என் பலமா நினைக்கிற மெலடி பாடல்களுக்காகவும் பயிற்சி எடுக்கிறேன். இன்னைக்கு டிவி இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் புதுப் பாடகர்கள் அதிகமா வர்றாங்க. இது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், இன்றைய இளம் பாடகர்களுக்கு, திறமையை வெளிப்படுத்துற மாதிரி சினிமாவில் பாடும் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை" என்கிறார்.

தந்தையின் நினைவுகள் குறித்துப் பேசியவர், ``அப்பா மேல நானும் என் மேல அவரும் ரொம்பப் பாசமா இருந்தோம். அவர் மறைந்து எட்டு வருஷமாகிடுச்சு. அவர் மறைவிலிருந்து இப்போ மீண்டு வந்துட்டேன். ஆனாலும், தினமும் அவரின் மெமரீஸ் நிச்சயம் வரும். அவர் பாடிய பாடல்களைக் கேட்டாலோ அல்லது அவர் நடிச்ச படத்தைப் பார்த்தாலோ, உடனே என்னை அறியாம கண்கலங்கிடுவேன். சினிமா உலகம் இருக்கிற வரைக்கும் அவர் வாழ்வார்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், பிரஷாந்தினி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு