Published:Updated:

`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்

சந்தோஷ் மாதேவன்

வருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த மார்வெல் ஆந்தெம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்
`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்

முதலில் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆண்டில், உலகளாவிய ரசிகர்களால் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். `மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸ்' எனப்படும் திரைப்படத் தொடரின் மிக முக்கியமான திரைப்படம் இது.

`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்

`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸி'ன் கடைசி படமும் இதுதான். அண்மையில் வெளியான `கேப்டன் மார்வெல்' உட்பட இதுவரை திரைக்கு வந்துள்ள 21 திரைப்படங்களின் இறுதிக்கட்டம் இந்தப் படம். அதனாலேயே இதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

மற்ற படங்களின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், கடந்த ஆண்டு வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் நேரடித் தொடர்ச்சியாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தொடரின் சூப்பர் வில்லனான தேனோஸ், `இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில், கிட்டத்தட்டப் பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகையை அழித்துவிட்ட நிலையில், இனி வரவிருக்கின்ற `எண்ட் கேம்' படத்தில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கூட்டணி இறந்தவர்களை எப்படி மீட்ருவாக்கம் செய்யப்போகின்றனர் என்பதே கதைக் கருவாக இருக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது. இதற்கான தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கான வசனங்களை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான் எழுதப்போகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவிலிருக்கும் மார்வெல் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. `எண்ட் கேம்' பட ரிலீஸை ஒட்டி இந்தியாவின் மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் மார்வெல் ஆந்தெம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என மார்வெல் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

வருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த மார்வெல் ஆந்தெம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.