Published:Updated:

``இதுவரை யாரும் செய்திராத புது முயற்சியாக இருக்கும்!'' - `பேட்ட ராப்' பற்றி தீபக்!

வே.கிருஷ்ணவேணி

ஜி தமிழ் சேனலில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது 'பேட்ட ராப்' மியூசிக் நிகழ்ச்சி. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கான நிகழ்ச்சி. சினிமா, சின்னத்திரை என பல பிரபலங்களுடன் விளையாடும் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் தீபக் மற்றும் மகேஸ்வரி. 

``மிஸ்டர் & மிஸஸ் கில்லாடிஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு இப்போது மறுபடியும் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறேன். இது கிட்டத்தட்ட யாரும் செய்யாத புது முயற்சி, புது நிகழ்ச்சி. செம்ம ஜாலியாகப் போகக்கூடிய நிகழ்ச்சி இது. நேற்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒளிபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

``இதுவரை யாரும் செய்திராத புது முயற்சியாக இருக்கும்!'' - `பேட்ட ராப்' பற்றி தீபக்!

எனக்குப் பொதுவாகவே மியூசிக் மீது ஈடுபாடு உண்டு. இந்த ஷோவைப் பொறுத்தவரை இரண்டு டீம்களாக வரும் செலிபிரிட்டிகளைப் பிரித்து விடுவோம். இதில் மூன்றுக்கும் மேற்பட்ட சுற்றுகள் உண்டு. அதில் போட்டோகார்ட், மியூசிக் ரவுண்ட் என ஒவ்வொரு சுற்றாக வரும்போது அந்தப் பாடல்களைக் கண்டுபிடிப்பதோடு, பாடவும் செய்ய வேண்டும். இதுவரை மூன்று ஷூட்ஸ் முடிந்திருக்கிறது. உதாரணத்துக்கு கமல், மதன், கார்த்திக் என ஆண்கள் ஒரு டீமாகவும், ஃபரீனா, நித்யா என பெண்கள் ஒரு டீமாகவும்  போட்டியில் கலந்துகொள்வார்கள். இது நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கும்''. என்றவர்  'இவனுக்கு தண்ணியில கண்டம்'  படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

``சில வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். கூடிய விரைவில் அந்தப் படத்துக்கான அறிவிப்பு வெளிவரும்'' என்றார் தீபக்.