Published:Updated:

`மிக்ஸ்டுதான் நாங்க சொல்லுவோம்!’ - சூப்பர்டீலக்ஸ் `டிங் டாங் புரொமோ’ குறித்து தியாகராஜன் குமாரராஜா

சனா
`மிக்ஸ்டுதான் நாங்க சொல்லுவோம்!’ - சூப்பர்டீலக்ஸ் `டிங் டாங் புரொமோ’ குறித்து தியாகராஜன் குமாரராஜா
`மிக்ஸ்டுதான் நாங்க சொல்லுவோம்!’ - சூப்பர்டீலக்ஸ் `டிங் டாங் புரொமோ’ குறித்து தியாகராஜன் குமாரராஜா

`ஆரண்யம் காண்டம்' இயக்குநர் தியாகராஜன் குமாராஜா எடுத்திருக்கும் அடுத்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பகத், சமந்தா கணவன் மனைவியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவே தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்துக்கான கதையை தியாகராஜன் தவிர நீலன் சேகர், நலன்குமராசாமி, மிஷ்கின் உள்ளிட்டோரும் எழுதியுள்ளனர். 

படத்தில் பாடல்களே இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று இணையத்தில் 'ding dong promo' என்ற பெயரில் புரோமோ வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமா உலகில் புதுவிதமான புரோமோவாக உள்ளதே, அதன் பெயரென்ன என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்டதற்கு, `இதற்கு பெயர் எதுவுமில்லை. இதை நாங்க மிக்ஸ்டுதான் குறிப்பிடுவோம். நீங்க டிங்டாங் புரோமோனே சொல்லிக்கங்க’ என்றார். இணையத்தில் இந்தப் புரோமோவுக்கு யுவன் பேன்ஸ் பலரும் தங்களது கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில், 'u1 always genius' போன்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், படத்துக்கு 'A' சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..