Published:Updated:

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

Published:Updated:
``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்
``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

கடந்த சனிக்கிழமை நடந்த `கொலையுதிர்காலம்' பட விழாவில் ராதாரவி, நயன்தாரா பற்றி பேசியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பல சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விசாக கமிட்டி வாயிலாக இதை விசாரிப்பீர்களா அல்லது குழு அமைத்து விசாரிப்பீர்களா என நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான விளக்கத்தை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் குட்டி பத்மினியிடம் கேட்டேன். 

``ஶ்ரீரெட்டி பிரச்னை சமயத்தில் நடிகர் சங்கச் செயற்குழு கூட்டத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதில் கவுன்சலிங் செய்யக்கூடிய அளவுக்கு இருக்கிற ஆறு பெண்களை நியமித்தார்கள். அதில், நான், ரோகிணி, கோவை சரளா போன்றோர் இருந்தோம். அந்தப் பிரச்னைக்குப் பிறகு, வேறு யாரும் பிரச்னை சம்பந்தமாக புகார் அளிக்க வராததால் அப்படியே பென்டிங்கில் இருக்கிறது'' என்றவர், 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாகா கமிட்டி ஒரு பக்கம் இருந்தாலும் , நாட்டில் நிறைய பேர் தற்கொலைப் பண்றாங்க அதற்கெல்லாம் சேர்த்து ஒரு கமிட்டி ஃபார்ம் பண்ணனும்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் நாங்க எல்லோரும் இருந்த குழு. ஆனால், அது இன்னும் முறையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை. ராதாரவி சென்ற அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருக்கிற வேண்டியது. சில காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. ஒருவேளை அங்கே சென்றிருந்தால் நிச்சயம் எழுந்து நின்று எதிர் கேள்வி கேட்டிருப்பேன். அவரின் பேச்சுக்கு, ``உங்களைப் பெற்றதும் ஒரு தாய், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், மனைவி இருக்கிறார். இப்படிப் பேசுவது எவ்வளவுப் பெரிய தவறு' என நான் முதல் ஆளாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தேன். 

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

அதன் பிறகு, நாசர் கண்டனம் கொடுத்திருக்கிறார். பொதுவாகவே, ராதாரவி நல்லாப் பேசக் கூடியவர், நல்ல நடிகர். அவர் சும்மா பேசினாலே கைத்தட்டல் விழும். அவர் நல்லபடியாக பேசலாம் அல்லவா. ஆனால், ஏன் இப்படி அவதூறு விஷயங்களை, அசிங்கமான விஷயங்களைப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. முன்பே, அவர் அ.தி.மு.க.வில் இருந்தபோது குஷ்பூவை கேவலமாக  பேசினார். ரொம்ப அசிங்கமாக, அவரையும் இன்னொரு அரசியல்வாதியையும் திட்டினார். அப்போதுதான் ஜாக்பாட்டிலிருந்து குஷ்பூ வெளிய வந்தாங்க. அப்படிப்பட்டவர் அவர்.

என்னுடைய சின்ன வயதில் அவருடன் சேர்ந்து நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் சுமுகமான உறவுதான் இருக்கிறது. எனக்காக ஒரு முறை ஃபன்ட் கலெக்ட் செய்து கொடுத்தார். ஆனால், இந்த மாதிரி விஷயங்களைப் பேசும்போது யாராக இருந்தாலும், கண்டனம் செய்யத்தான் செய்வார்கள். இப்போதுதான் பெண்கள் படித்து வேலைக்குப் போகிறார்கள். அதற்கே இவ்வளவு நாள்கள் ஆகிவிட்டது.

இப்போது சினிமா போன்ற நடிப்புத் துறையில் பெண்கள் ஜொலிக்க வேண்டும் என நினைக்கிற  நேரத்தில் தவறான விஷயங்களை பேசுவது, அவர்களுக்குத் தடையாக அமையாதா. ஒரு மாதக் குழந்தையில் இருந்து, அறுபது வயது வரை உள்ள பெண்மணிகள் வரை பாலியல் பிரச்னை செய்கிறார்கள்.  நடிக்கிற தொழிலுக்கு வரும் பெண்களை இப்படி இழிவுப்படுத்திப் பேசினால் எப்படி. இந்த விஷயத்தில் ஸ்டாலின் சாரை நான் பாராட்டியே ஆக வேண்டும். அவர் ராதாரவியை நடிகர் என விட்டிருக்கலாம். ஆனால், அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீக்கியிருக்கிறார். 

இவ்வளவு நாள்கள் குட்டக்குட்டக் குனிந்து கொண்டிருப்பதால்தான் நம்ம நாடே இப்படி இருக்கு. இனி அப்படி நடக்கவிடக்கூடாது என என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் பேசத் தயாராக இருக்கிறோம். அதேபோல சின்மயி பற்றி ராதாரவி பேசியதும் ரொம்பத்தவறு. அவருடைய டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை அனுப்பிவிட்டார். மெம்பர்ஷிப் கட்டாததால் தூக்கிவிட்டோம் என்றார். கையில் பதவி இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.'' என்றவரிடம் நயன்தாராவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, 

``நயன்தாரா கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுக்காம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?''! - குட்டி பத்மினி்

``விசாகா கமிட்டி மூலமாக போக மாட்டாங்கனு நினைக்கிறேன். நடிகர் சங்கம் வழியாகத்தான் போவாங்க. எப்படி இருந்தாலும், நயனம்மா ஒருலெட்டர் தரணும். அவங்க ஒரு கம்ப்ளைன்ட் பண்ணாம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவர் தண்டிக்கப்படவேண்டுமானால் கண்டிப்பாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும். அதனால் இப்போதைக்கு தானாக போய் எடுப்பது சட்டப்படி செல்லாது. ராதாரவியும் சட்டம் படித்தவர்' என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

அவங்க நிகழ்ச்சிக்கே போயிட்டு, அவங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, சொத்து விவகாரத்தில் நடிகர் சங்கத்திலிருந்து சஸ்பெண்டு செய்துவிட்டோம். நிறைய பேர் மீட்டிங் வரமாட்டீங்கனு சத்தம் போட்டார்கள். இனிமேல் இந்த விஷயத்தை எப்படியாவது பிரஷர் கொடுத்து ஃபார்ம் பண்ண வச்சிடுவோம். 

எல்லா பெண் ஆர்ட்டிஸ்டுமே வரத் தயாராக இருக்கிறாங்க. ஒருத்தருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒத்துப் போய்தானே சில நேரங்களில் தவறுகள் நடக்கிறது. இந்தி பக்கம், யாரையும் கம்ப்ளைன்ட் கொடுங்கள் என வற்புறுத்த முடியாது. யார் ஒருத்தர் மீது அதிகப்படியான புகார்கள் வந்திருக்கிறதோ, அவர்கள் விமனைஸராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 

இதை ஆரம்பித்த பிறகும், எத்தனை பேர் தைரியமாக சொல்லப் போகிறார்கள் என்பது தெரியல. 
மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராதாரவி. எல்லா உறுப்பினரும் சேர்ந்துதான் அதை முடிவெடுத்து, பெப்ஸியும் உடன் இருந்து செய்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படி செய்தே ஆக வேண்டும். 

டப்பிங் யூனியன் பிரசிடன்டா இருக்கிறார். அந்த பங்கஷனுக்கு போயிருக்க வேண்டியது. என்னால் போக முடியவில்லை. ஒருவேளை போயிருந்தால் எழுந்து நின்னு கேள்வி கேட்டிருப்பேன். பெண்கள் சார்ந்த அமைப்பில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த பிரச்னை சீரியஸாகும்.'' என்றவர், இதையெல்லாம் சங்கம் சார்பாக நான் பேசவில்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்றார் குட்டி பத்மினி.