Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி கண்டிப்பாக அமையும்! - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே ஆருடம்

சனா
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி கண்டிப்பாக அமையும்! - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே ஆருடம்
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி கண்டிப்பாக அமையும்! - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே ஆருடம்

நாடளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலின் முடிவை மக்கள் ஆதரவாக எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். இந்த நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திடீரென்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து அவரிடம் பேசினேன். 

``தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சிறு வயது முதலே இருக்கிறேன். தமிழ்நாட்டில் இந்தக் கட்சி உதயமான நாளிலிருந்தே நான் அதில் உறுப்பினர். மாணவர் தலைவராக இருந்திருக்கிறேன். படிப்படியாக கட்சியிலிருந்து மேல் நிலைக்கு வந்தவன் நான். என் அப்பா ஜோதி துரையும் ஒரு அரசியல்வாதிதான். ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகுதான் நான் அரசியலுக்கு வந்தேன்.

பரங்கிமலை மாவட்ட கவுன்சிலராகவும் என்னோட கட்சியின் சார்பாக போட்டியிட்டிருக்கிறேன். அதனால் எனக்கு அரசியல் புதுசு இல்லை. தற்போது எங்கள் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. அதற்காக வாழ்த்து தெரிவிக்கதான் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தேன். எனக்கு இந்தத் தேர்தல் நேர்மையுடன் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமல்லாமல், நாடளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சி கண்டிப்பாக அமையும். தமிழ்நாட்டில் நாற்பது இடங்களிலும் மாநில அரசே வெற்றி பெறும்.'' என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஜே.எஸ்.கே. 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..