Published:Updated:

``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்
``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

``இப்போதிருக்கும் அரசியல் சூழல் பற்றிய விஷயங்களில் நான் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. காரணம், பல இடங்களில் நான் புண்பட்டு வந்ததுதான். இப்போதும் நான் பா.ஜ.க வில்தான் இருக்கிறேன். ஆனால், நான் இல்லை என்பது போல்தான் இருக்கிறேன். எனக்குப் பா.ஜ.க மீதும் அதிருப்திதான். ஹெச்.ராஜா உங்களுக்குப் பழக்கமா எனக் கேட்கிறார்கள். நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை'' என நிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகர் பொன்னம்பலம். 

``நாங்க ஸ்டன்ட்டுக்கு வரும்போதே உயிர் பற்றிய பயத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான் வருகிறோம். சகோதர, சகோதரிகளைக் கரையேற்ற எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறோம். பொய், திருட்டு தவிர உழைப்பை மட்டுமே நம்பித்தான் என்னைப் போன்ற பலர் சினிமாவுக்குள் வந்தார்கள், கடுமையாக உழைத்தார்கள். அதன் பிறகு அரசியலில் அபிமானமான கட்சிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.  அப்படித்தான் நானும், அ.தி.மு.க-வில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தேன். அவர்களுடைய திட்டம், தைரியம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவர் இறந்த பிறகு, எல்லாமே மாறிவிட்டது. நான் இப்போது சொல்வதுகூட ஆதங்கத்தைத்தான். யாரையும் குறிப்பிட்டு குற்றம்சாட்ட விரும்பவில்லை. எம்.ஜி.ஆர் எப்படி தன் சொத்துகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று நினைத்தாரோ அதேபோலத்தான் ஜெயலலிதாவும் அவர் இறுதியாக பிரசாரம் செய்யும்போதுகூட `மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று சொல்லிச் சென்றார். அப்படி அவர் சொன்னதற்காவது அவர் பெயரில் ஒரு டிரெஸ்ட் அமைத்து மக்களுக்கு நல்லது செய்திருக்கலாம். ஆனால், அவர் உயிரோட இருக்கும்போது தன்னுடைய சொத்து என இருந்ததெல்லாம் இப்போது யார் யார் கையிலோ இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், எது ஜெயலலிதாவுக்கு உரித்தானவை எனத் தெரியவே இல்லை. இதையெல்லாம் கண்கூடாக என்னால் பார்க்க முடியவில்லை. விலகிவிட்டேன். 

``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

ஆரம்பத்தில் மோடி மீதான ஈர்ப்பால் பா.ஜ.க-வில் இணைந்தேன். போகப் போக மக்கள் மீது இறங்கியிருக்கும் சுமைகள், நீண்ட காலமாக இருந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம்' எனப் பல விஷயங்கள் என்னை ஏதோ செய்துகொண்டே இருந்தது. நான் பொதுவாகவே கடவுள் பக்தி உள்ள ஆள். அதனால் அதில் என் மனதைச் செலுத்துவேன். இப்போது நாட்டில் நல்ல வைபரேஷன் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் எங்கும் வாய்திறக்காமல் ஆன்மிகத்தில் முழு ஈடுபாட்டோடு இப்போது இருந்து வருகிறேன் '' என்றவரிடம், `உங்களுக்குத் தோன்றும், மக்களுக்குப் பயனுள்ள விஷயங்களை எடுத்துச் சொல்லலாமே..?' என்று கேட்டதற்கு, 

`நான் எதற்காகச் சொல்ல வேண்டும். இன்னொன்று நான் சொன்னால் யார் கேட்பார்கள்' என எனக்குத் தோன்றுகிறது. அதனால் எங்கும் வாய் திறப்பதில்லை. இன்னொன்று திறமையான, படித்த ஆட்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பவர்களில் நானும் ஒருவன். வரும்போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளே வந்தப் பிறகு தனக்கு மட்டுமே நல்லது எது எனப் பார்க்கிறார்கள். 

இன்னொன்று, முதலில் மக்கள் திருந்த வேண்டும். அவர்களுக்கு இவர் நல்லவர், இவர் நல்லது செய்யாதவர் எனத் தெரிந்தும் வாக்களித்து அவர்களை அமர வைக்கிறார்கள். பிறகு, நாட்டுக்கு எல்லா கஷ்டமும் வந்து சேர்கிறது. திரும்பத் திரும்ப பார்த்தவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. கமல் போன்று படித்த, சிந்திக்கத் தெரிந்த ஆட்களை எதிர்பார்க்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியால் கமலை பிடிக்கிறது என்று சொல்லவில்லை. எந்த மேடையிலும், எப்படிப்பட்ட கடினமானக் கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு அசராமல் பதிலளிப்பவர். அவரைப் போன்று திறமைசாலிகள் வேண்டும் என நினைக்கிறேன்'' என்றவரிடம், அவருடைய கட்சியில் சேர்ந்திருக்கலாம் அல்லவா என்றதற்கு, 

``பா.ஜ.க வில்தான் இருக்கிறேன்; ஆனால் இல்லை!''- மனம் திறந்த நடிகர் பொன்னம்பலம்

``போதும் கிட்டத்தட்ட முக்கிய கட்சிகளில் வலம் வந்தாகிவிட்டது. இதற்கு மேலும் எங்கும் போக எனக்கு இப்போதைக்கு விருப்பமில்லை. அரசியல்வாதிகளுக்கு நாட்டுமீது பற்று வர வேண்டுமானால், அவர்களின் வாரிசுகளில் ஒருவரை ராணுவத்துக்கு இரண்டு வருடங்கள் தாரை வார்த்துத் தரவேண்டும். அப்படி அனுப்பும்போதுதான் எல்லையில் நாட்டுக்காக உயிர்த் தியாகம், வீரர்கள் படும்பாடு எனப் பல விஷயங்கள் புரியும். அதில் சிறிதேனும் மக்களுக்குப் செய்வார்கள் அல்லவா. 

அதேபோல இன்று இளைஞர்களைச் சினிமா மிகவும் கெடுத்து வைத்துள்ளது. உதாரணத்துக்கு `90 எம்.எல்' படம். அந்தப் படத்தின் டிரெய்லருக்குப் பிறகு படமே பார்க்கவில்லை. அய்யய்யோ எத்தனைக் குழந்தைகள், மாணவர்கள் அது மாதிரியானப் படங்களால் கெட்டுப் போகிறார்கள். இதை எல்லாம் யார் தட்டிக் கேட்பது. இதற்கு அடிப்படை கல்வியில் புரிதல் வேண்டும். கல்லூரியின் முதல் வருடத்திலாவது ஒரு தாய் குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை விவரிக்க வேண்டும். அப்போதாவது அடுத்த பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடக்காமல் இருக்கும். இப்போது இருக்கும் சூழலில் ஒன்றே போதும் என குழந்தைப் பெறுவதிலும் கட்டுப்பாடு வந்துவிட்டது. அதனால் அக்கா, தங்கை, தம்பி என்கிற சகோதரப்பாசம் தெரியாததால்தான் மற்றப் பெண்களைப் பார்த்ததும் தவறாகவே அணுக நினைக்கிறார்கள். அந்தப் பாசத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப் புரிய வைக்க வேண்டும்'' என்றவர்,

'இன்றைய அரசியலில் ஒரு சிலர் நன்றாகப் பேசுகிறார்கள் என்பதைத் தாண்டி வேறு எந்த கமென்டையும் சொல்ல விரும்பவில்லை. திறமையுள்ள புது முகங்களை எதிர்பார்க்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார் நடிகர் பொன்னம்பலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு