Published:Updated:

`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’ - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு

வே.கிருஷ்ணவேணி
`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’  - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு
`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’ - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு
`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’  - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு

அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளராக களமிறங்கியிருக்கிறார் நடிகை, செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு. பிரசாரப் பயணம், வாரிசு அரசியல் போன்ற சில கேள்விகளை முன் வைத்தோம், 

வாரிசு அரசியலாகி வரும் நிலை தற்போது நீடிக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்றதற்கு, `` ஒரு மருத்துவர் தன் மகனை மருத்துவனாக்க நினைப்பதுபோல, ஒரு நடிகர் தன் மகன்/மகளை நடிகராக்க நினைப்பது போலத்தான் அரசியலிலும். ஓ.பி.எஸ் மகன் அரசியலில் இறங்கியிருப்பதும் அப்படித்தான். அவர் திடீரென உள்ளே வந்துவிடவில்லை. தனது அப்பாவுடன் தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள்கள் அவரைப் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. இப்போது தேர்தல் சமயம் என்பதால் சரியான நேரத்தில் போட்டியிடுகிறார் அவ்வளவுதான். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.'' என்றவர், 

`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’  - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு

``ஜெயலலிதா மாதிரியான ஆளுமையை இனி பார்ப்போமா என்று தெரியவில்லை. அவர் உயிரோடு இருந்தபோது கட்சியில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. தற்போது அது குறைந்துள்ளதாகவே நினைக்கிறேன். அவருடைய வழிகாட்டுதலால்தான் இன்றும் நாங்கள் மக்கள் தொண்டாற்றி வருகிறோம். அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்கள் இன்றும் பல பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கிறது. அதேபோல, எவ்வளவு பிரமாண்டமானக் கூட்டமாக இருந்தாலும் தன்னுடைய சுக, துக்கங்களை வெளிக்காட்டாமல் இருந்தவர். 

`அப்போது எல்லா ஊடகங்களிலும், செய்திகளிலும் மோடி என்றே உச்சரித்து வந்தார்கள். அம்மா எங்களை அழைத்து, எழுத்தில் வேண்டுமானால் மோடி என்று இருக்கலாம். ஆனால், உச்சரிக்கும் பொழுது மோதி என்றுதான் உச்சரிக்க வேண்டும் எனச் சொல்லி அனுப்பினார். அன்றிலிருந்து இன்று வரை மோதி என்றுதான் உச்சரித்து வருகிறோம். இப்படி எங்கள் ஒவ்வொருவரையும் மெருகேற்றியவர் ஜெயலலிதா. இன்றும் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்.'' என்றவரிடம் சமீபத்தில் தே.மு.தி.க பிரேமலதா பிரஸ் மீட்டில் பேசியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 

`ஓ.பி.எஸ் மகன் திடீரென கட்சிக்குள் வந்துவிடவில்லை’  - வாரிசு அரசியல் குறித்து பாத்திமா பாபு

``அதைத் தைரியம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதுதான் நான் முன்பே கூறியதுபோல, பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும் எனத் தெரியாமல் பேசியிருக்கிறார். அது முற்றிலும் தவறான விஷயம்.

இப்போதும் எங்கள் கட்சி நல்ல ஒரு ஆட்சியை மக்களுக்கு அளித்து வருகிறது. நல்ல வலுவான கூட்டணிகளும் இப்போது கரம் கோத்திருக்கின்றன. பிரதமர் மோடி, ஜெயலலிதா இருவருமே நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அரசியல் சார்ந்த சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. இப்போதும் அதே நட்புடன்தான் தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.கவுடன் இருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியுடன் நட்புடன் இருப்பதுதான் நல்லது. இந்தத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெறுவது உறுதி.'' என்றவர் காஞ்சிபுரம் முதல் தர்மபுரி வரை பல ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.