Published:Updated:

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி!

அலாவுதின் ஹுசைன்
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி!
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி!

`சூப்பர் டீலக்ஸ்' படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி. அடுத்து `மாமனிதன்', `சிந்துபாத்' உள்ளிட்டப்  படங்களும் வெளியாகத் தயாராகும் நிலையில், துக்ளக்' படத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து விஜய் சேதுபதி `ஐரா' படத்தைத் தயாரித்திருக்கும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவருடன் `ரம்மி', `பண்ணையாரும் பத்மினியும்' `தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்த ஐஷ்வர்யா ராஜேஷை தேர்வு செய்திருக்கிறார்களாம். ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கவுள்ளார். இவர் `ஐரா' இயக்குநர் சர்ஜுனின், நான் அவன் இல்லை, நாம் படங்களை இயக்கிய செல்வா ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்தார். ஐஷ்வர்யா ராஜேஷ் தான் நடித்த `கனா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி'  படத்தில் நடித்து வருகிறார்.