Published:Updated:

`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு

`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு
`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு

`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு

`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க வில் திடீரென இணைந்தார் நடன இயக்குநர் கலா. அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம், 

``திடீரென அ.ம.மு.க-வில் இணையக்காரணம்?''

``பல விஷயங்களை யோசித்துத்தான் பொதுவாகவே முடிவெடுப்போம். அப்படி நன்கு யோசித்து முடிவெடுத்ததுதான் இது. கடந்த 6 மாதங்களாக யோசித்தேன். சரி என்று பட்டது. இணைந்துவிட்டேன். பொதுவாகவே, நிறைய நியூஸ் பார்ப்பேன். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தா இரவு பத்து மணிவரை அதனுடைய ஃபாலோ அப் இருக்கும். 2004 -5ல் ரகு மாஸ்டர் மூலமாக ஜெயலலிதா இருந்த டைம்ல கட்சியில் இணையச்சொல்லிக் கூப்பிட்டார்கள். போக முடியவில்லை. கடவுள் பக்தியால்தான் இது நடந்திருக்கிறது. என் கையில் விநாயகரை பச்சைக் குத்தியிருக்கிறேன். அம்மா, அப்பாவுக்குப் பிறகு கடவுளைத்தான் நம்புவேன். ஜோசியத்திலயும் நான் உள்ளே நுழைவேன் எனச் சொன்னாங்க நடந்துடுச்சு.''

``தினகரனிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்ன தகுதி இருப்பதாக நினைக்கிறீங்க?''

``அவருடைய எளிமை.  அனுபவம். தலைமை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. முன்பு சினிமா, ஸ்டேஜ் புரோகிராம் என நிறைய செய்திருக்கிறேன். மெடல் புரோகிராம், வீரப்பன் ஷோ, நேரு ஸ்டேடியத்தில் விவசாயிகள் ஷோ  என நிறைய பண்ணியிருக்கேன். இந்தக் கட்சியில் சேர்ந்தேன் என சொன்னதும் நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்திருக்கிறது.  சேரும் வரை யார்கிட்டயும் சேரலாமானுக் கேட்கல. ஆர்.கே.நகரில் நின்றார் அல்லவா அதுவே பெரியவிஷயம். அவருடைய போராட்டத்தில் வெற்றி அடைகிறார் அல்லவா அதுதான் பிடிக்கிறது. ரொம்ப முக்கியமாக அவருடைய தைரியம் பிடித்திருக்கிறது. ஆர்.கே தொகுதி ஒன்று போதுமே. அவர் கஷ்டப்படுகிறார். கண்டிப்பாக வெற்றியடைவார். அவருடன் கடவுள் துணை நிற்பார். எனக்குப்  பிடித்தது தமிழ்நாடு. அதனால் எந்த ஏரியா கொடுத்தாலும் நல்லா பண்ணுவேன். 

இப்போதைக்கு பொக்கே கொடுத்திருக்கேன். ஹலோ சொல்லியிருக்கேன். அதுதான் ரெஸ்பெக்டா இருந்தது. கலைக்கு மரியாதைக் கொடுத்தார். வாங்க மாஸ்டர். கொஞ்சம் டிலே ஆகிடுச்சினு சாரி சொன்னார். அப்படி சொல்லணும்னு அவசியம் இல்லையே. ஆடியன்ஸ் பல்ஸ் வைத்து பேசுவது அவருடைய ப்ளஸ்.''

`ஜோசியத்தில உள்ளே நுழைவேன்னு சொன்னாங்க நடந்துடுச்சு!'- நடன இயக்குநர் கலா போட்ட கணக்கு

``கிழி கிழினு அரசியலில் கிழிக்கப் போறது யாரை?''

``நாம் ஏன் மத்தவங்களைத் திட்ட வேண்டும். என் தலைமை என்னப் பண்ணப் போகுதோ அதைத்தான் செய்வேன். பெண்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு எனப் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். ஒரு `ஸ்டூடண்ட் மீட்' டில் 'அம்மா எனக்கு லேப்டாப் கொடுத்தாங்கனு' சொன்னாங்க. இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறாங்க அந்தப் பொண்ணு. எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா?'' 

``நண்பரான கமல்ஹாசன் கட்சியில் ஏன் சேரவில்லை?''

``ஃபேமிலி பிரண்ட் அவர். ரகு மாஸ்டர் உயிர்தோழனாக இருந்தவர். அந்த ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறேன். நாளைக்கு நடக்கப்போகும் விஷயத்தைப் படமாகவே அவர் படங்களில் எடுத்துக் காண்பித்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அவரைப் பார்க்கிறேன். ரகு மாஸ்டரும், அவரும் ஒன்றா சேர்ந்து ரிகர்சலுக்குப் போவாங்க. அந்த ரிலேஷன்ஷிப் கெட்டுப் போகக்கூடாதுன்னு பார்க்கிறேன். அதனால்தான் இணையவில்லை.''   

``டி.டி.வி.தினகரன், சசிகலா என பேமிலிதான் மொத்தக் கட்சியும். எப்படி பார்க்கிறீங்க?''

``என்னுடைய ஷோவில் பெரும்பாலும் என் குடும்பத்தார் இருக்காங்க. அது மாதிரி ஒரு பிணைப்புதான் கட்சியில் இருப்பதும். அவங்க ஆளத் தெரியாமல் இல்லையே. அரசியல் பற்றியும் தெரிந்துதானே இருக்கு.''
 
``கொள்கை ரீதியாக தி.மு.க மீது ஈர்ப்பு வரவே இல்லையே?''

``சேனலில் ஒரு ஆளாக... அதாவது வீட்டில் ஒருத்தியாக இருந்திருக்கேன். அதனால் கேட்கத் தயக்கமாக இருக்கும். அதனால்தான் விட்டுவிட்டேன். ஒரு ஆர்ட் டைரக்டர்தான் அ.ம.மு.க பற்றியும் கேட்டார். அதன் பிறகுதான் டி.டி.வி. கட்சியில் இணைந்தேன். அவங்க பேசின விதம் எனக்குப் பிடிச்சிருந்தது. சினிமாவில் அறுபது கேரக்டர்களைக்கூடப் பார்க்கிறவர்கள். அதனால் டி.டி.வி கட்சி வித்தியாசமாக இருந்தது அதனால்தான் இணைந்திருக்கிறேன்.''

அடுத்த கட்டுரைக்கு