Published:Updated:

`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

வே.கிருஷ்ணவேணி

1953-ல் “பெற்றதாய்” படத்தின் வாயிலாகத் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் பி.சுசிலா. `தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இடம்பெற்ற `மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..', `தமிழுக்கு அமுதென்று பேர்...'  போன்ற நெஞ்சில் நிறைந்த மறக்க முடியாத பாடல்களைத் தந்தவர். அதில் ஆரம்பித்து இந்திய மொழிகளில் இதுவரை மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக `பத்மபூஷண்' விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும், 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.   

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானக்குயில் பாடகி சுசீலா. இவருக்குத் தெலுங்கு தாய்மொழி. இருப்பினும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வந்தாலும் அவர் பாடிய `சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலும், பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் என்றும் நினைவில் நீங்காதவையாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 

`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி, `கின்னஸ் சாதனை'யைப் படைத்துள்ளார். சினிமாவுக்கு வந்து 65 வருடங்களைக் கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84 ஆகிறது. ஆனால், அவரின் குரலுக்கு வயதே ஆகவில்லை. இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்டது. 

இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பாடகி சுசீலாவுக்கு `லயா மீடியா' சார்பாக தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார். இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு பிரமாண்ட விழாவை நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

`தேன்குரல்' சுசீலாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! ஆளுமைகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

பி.சுசீலாவின் வானுயர்ந்த புகழுக்குப் பாராட்டுவிழா நடக்கவிருக்கிறது. வரும் மே மாதம் 19-ம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்கின்றனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.