Published:Updated:

நிபா வைரஸை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் - முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி

தார்மிக் லீ
நிபா வைரஸை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் - முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி
நிபா வைரஸை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் - முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி

தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகை ரேவதி. தற்போது, மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கும் 'வைரஸ்' படத்தில் நடித்து வருகிறார். இது, நிஜ சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். 

சமீபத்தில், 'அம்மா கணக்கு', 'குலேபகாவலி', 'கேணி' போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது ஆஷிக் அபு இயக்கும் 'வைரஸ்' எனும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நிஜ சம்பவத்தை மையமாகவைத்து உருவாக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்று, கடந்த வருடம் கேரளாவை ஆட்டிவைத்த வைரஸ், நிபா. வௌவால்களால் பரவும் இந்த வைரஸுக்கு, கடந்த வருடம் 10-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் உயிரழந்ததோடு, பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவருகிறது, 'வைரஸ்'. படத்தில், நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். மேலும், குஞ்சக்கோ போபன், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், சௌபின் ஷஹிர், பூர்ணிமா இந்திரஜித், ரம்யா நம்பீசன், மடோனா, ஜோஜு, திலீஷ் போத்தான் போன்ற பல நடிகர்கள் இதில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தார்மிக் லீ