Published:Updated:

இரண்டு தேசிய விருதுகளை வென்ற தமிழ் படத்தின் ரீ-மேக் - தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா!

உ. சுதர்சன் காந்தி.
இரண்டு தேசிய விருதுகளை வென்ற தமிழ் படத்தின் ரீ-மேக் - தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா!
இரண்டு தேசிய விருதுகளை வென்ற தமிழ் படத்தின் ரீ-மேக் - தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா!

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம், 'ஜிகர்தண்டா'. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டினார். இதுவே, 'பேட்ட' திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்ததே தவிர, அதைப் பற்றிய அப்டேட் எதுவும் இல்லாமலே இருந்தது. இந்த நிலையில், இதன் தெலுங்கு வெர்ஷனில் சித்தார்த் கேரக்டரில் அதர்வாவும், பாபி சிம்ஹா கேரக்டரில் வருண் தேஜும் நடிக்கவிருக்கின்றனர்.

இது அதர்வா தெலுங்கில் அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மேனன் கேரக்டரில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி நடிக்கிறார். `வால்மீகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறதாம். 

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan