Published:Updated:

``சூப்பர் டீலக்ஸ் வெற்றிச்செய்தி வந்துட்டே இருக்கு... நான் அவன்கிட்ட எதையும் சொல்றதில்லை'' - அஷ்வந்த் தந்தை அசோக்

``சூப்பர் டீலக்ஸ் வெற்றிச்செய்தி வந்துட்டே இருக்கு... நான் அவன்கிட்ட எதையும் சொல்றதில்லை'' - அஷ்வந்த் தந்தை அசோக்
``சூப்பர் டீலக்ஸ் வெற்றிச்செய்தி வந்துட்டே இருக்கு... நான் அவன்கிட்ட எதையும் சொல்றதில்லை'' - அஷ்வந்த் தந்தை அசோக்

``சூப்பர் டீலக்ஸ் வெற்றிச்செய்தி வந்துட்டே இருக்கு... நான் அவன்கிட்ட எதையும் சொல்றதில்லை'' - அஷ்வந்த் தந்தை அசோக்

`சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அனைவராலும் பாராட்டப்படும் கதாபாத்திரம் `ராசுக்குட்டி'. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அஷ்வந்த் தான் ராசுக்குட்டியாக நடித்திருக்கிறார். பல தரப்புகளிலிருந்தும் இந்தச் சுட்டிப் பையனுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கிறதாம். அஷ்வந்த்தின் அப்பாவிடம் பேசினோம்.

சின்ன வயசுல இருந்தே நடிக்கிறதுன்னா அஷ்வந்துக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டுல அடிக்கடி ஏதாவது படத்தோட வசனத்தைப் பேசிட்டு இருப்பான். அந்தச் சமயத்துலதான் ஜீ தமிழ் 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிக்குக் கூட்டிட்டுப் போனோம். அங்கே போனதுக்கு அப்புறம் அவன் பல விஷயங்களில் மாறினதை எங்களால் உணர முடிஞ்சது. ரொம்ப ஹார்டு வொர்க் பண்ண ஆரம்பிச்சான். டயலாக் மனப்பாடம் பண்றது அவனுடைய ப்ளஸ். மனப்பாடம் பண்றான் என்பதைக் கண்டுபிடிக்காத அளவுக்கு கேஷூவலா டயலாக் டெலிவரி பண்ணுவான். அந்த ரியாலிட்டி ஷோவில் டைட்டில் வின் பண்ணினது அவனுக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்துச்சு. அதுக்கு அப்புறம் பட வாய்ப்புகள் வந்துச்சு. அவனுக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணட்டும்னு அவனுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம் அவ்வளவு தாங்க. இப்போ அஷ்வந்த் இரண்டாம் வகுப்பு படிக்கிறார் என்றவரிடம் `சூப்பர் டீலக்ஸ்' ரெஸ்பான்ஸ் குறித்துக் கேட்டோம். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் டீலக்ஸ் படம் வெற்றி பெற வாழ்த்திவிட்டு இந்தப் படத்தில் என் ஃபேவரைட் ராசுக்குட்டியும் சில்பாவும் தான்னு ட்வீட் பண்ணியிருந்தார். குறிப்பிட்டுச் சொல்ற அளவுக்கெல்லாம் இல்லை. பலரும் போன் பண்ணி விஷ் பண்றாங்க. நான் பிரீமியர் ஷோ பார்த்தேன். பையனுடைய நடிப்பைப் பார்த்துட்டு எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு. இடைவேளை விட்டதும் இயக்குநர் சார்கிட்ட போய் கை கொடுத்து என் பையனை சூப்பரா நடிக்க வைச்சிருக்கீங்க சார்னு சொன்னேன். அவர் நான் எதுவும் பண்ணலை. அவன் நடிச்சிருக்கான்! அவ்வளவுதான்னு ரொம்ப எளிமையா பதில் சொன்னார்.

டைரக்டர் சார் ரொம்ப ஃப்ரீயா அஷ்வந்த்தை நடிக்க வைச்சார். அதனாலதான் இந்த ரிசல்ட் கிடைச்சிருக்கு. சீரியஸா ஏதாவது ஒரு சீன் நடிச்சிட்டு இருப்பாங்க.. திடீர்னு வந்து இது ஏன் இப்படி இருக்கு. அப்படின்னு குழந்தைத்தன்மையோட நிறைய கேள்விகேட்பான். அவன் கேட்கிற கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லுவார். விஜய் சேதுபதி சாரை முதல் நாள் மீட் பண்றோம். அப்போ டேய் உனக்கு என்னடா பிடிக்கும்னு அவர் கேட்டார். உடனே, கார் பிடிக்கும்னு சொன்னான். இரண்டாவது நாளே அவனுக்கு கார் வாங்கிக் கொடுத்துட்டார். உடனே குஷியாகிட்டான். அவர் அசோக்குமார் மகனேன்னு அவனைக் கூப்பிடுவார். அவன் காளிமுத்து மகனேன்னு கூப்டுவான். அந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்தாங்க. 

முன்னாடியே எங்ககிட்ட டையலாக்ஸ் கொடுத்தாங்க. டையலாக் பேப்பரை படிச்சிட்டான். அதுனாலேயோ என்னவோ அவனால் செட்டுல ரொம்ப கேஷூவலா நடிக்க முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். அவன் ஹேர்ஸ்டைல், காஸ்டியூம்னு எல்லாத்தையும் மாத்தினார் என்றவரிடம் அஷ்வந்த் என்ன செய்றார்ன்னு கேட்டோம்.

அவனுக்கு எதுவும் தெரியாது. நேற்றிலிருந்து நிறைய போன்கால் எனக்கு வந்துட்டு இருக்கு. நான் எதுவும் அவன்கிட்ட சொல்றது இல்லை. அவன் அவனுடைய குழந்தைத்தன்மையைக் கொண்டாடட்டும். இப்போவே அவனுக்கு எதையும் திணிக்க வேண்டாம்னு நினைக்கிறோம். நேற்று என்கிட்ட குட்டிப் பந்து வாங்கித்தரச் சொல்லிக் கேட்டான். அந்தப் பந்து வாங்கிக் கொடுத்தேன் எனப் புன்னகைக்கிறார் அசோக்.

அடுத்த கட்டுரைக்கு