Published:Updated:

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

அசார் முதல் `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா வரை... பிரபலங்கள் சிலர் தங்களது ஏப்ரல் ஃபூல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!
அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

பிப்ரவரி மாதம் எப்படி காதலர் தினத்துக்கு ஸ்பெஷலோ, அதேமாதிரி ஏப்ரல் மாதம் ஏமாற்றங்களுக்கு ஸ்பெஷல். `டேய்... உன் சட்டையில இங்க் இருக்குடா’ என்பதில் தொடங்கி, `லவ் யூ’ சொல்லி ஏமாற்றுவது வரை... ஏப்ரல் ஃபூல் வருடா வருடம் அப்டேட்டாகிவருகிறது. அப்படிச் சில இளம் பிரபலங்கள் மொக்கை வாங்கிய மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபங்களைப் பற்றிப் பார்ப்போம்! 

`கலக்கப்போவது யாரு’ அசார் :

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

``நான் ஒரு ஃபேமிலி பாய். எனக்கு ஒரு அண்ணா, ஒரு தங்கச்சி. தங்கச்சி பேரு பெனா. அவங்க ரொம்ப இன்னோசென்ட். அவுங்களுக்குக் கல்யாணமாகி போனதுக்குப் பிறகு, ஒருநாள் நைட்டு, எங்க வீட்டுக்குப் பின்னாடி இருந்த தென்னந்தோப்புக்குத் திருடன் வந்து அலப்பறை பண்ணிட்டுப் போயிட்டான். அடுத்த நாள் நான் என் தங்கச்சிக்குக் கால் பண்ணி இந்த விஷயத்தைச் சும்மா சொல்லாம, அப்படி இப்படினு கொஞ்சம் சினிமால வர்ற மாதிரி டெரர்ரா ஏத்திச் சொல்ல, அவங்களும் நம்பிட்டாங்க. கடைசியில ரொம்ப பயந்துபோய் என்னதான் ஆச்சுனு கேட்க நான், `தொடரும்னு மரத்துல எழுதிட்டுப் போயிட்டான்’னு நாடகத்துல வர்ற மாதிரி ஒரு எண்ட் கார்டைப் போட்டு அன்னைக்கு அவங்களை ஏமாத்திட்டேன். அவங்களும் அப்படியே நம்பிட்டாங்க. ஆனா உண்மையில அவ்ளோ டெரர்ரா அன்னைக்கு தென்னந்தோப்புல எதுவுமே நடக்கலை.’’ 

`மைக் செட்’ ஸ்ரீ ராம் :     

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

``எனக்கு நடந்ததைவிட என் ஃப்ரெண்டுக்கு நடந்ததுதான், என்னால மறக்கவே முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவம். அவன் ஒரு பொண்ண ரொம்பநாளா ஒன்சைடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தான். அந்தப் பொண்ணும் இவன்கிட்ட ஒருநாள் புரொபோஸ் பண்ணுச்சு. இவனும் குஷியில எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய் தாம் தூம்னு பாா்ட்டி வெச்சான். இந்த விஷயம்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, அந்தப் பொண்ணு புரொபோஸ் பண்ணது ஏப்ரல் 1-ம் தேதி. அந்தப் பொண்ணு இவன்கிட்ட ஏப்ரல் ஃபூல் பண்ணியிருக்கானு. பாவம், அவன் இன்னும் அந்தப் பொண்ணை லவ் பண்ணிக்கிட்டுதான் இருக்கான். ஆனா, அந்தப் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சு.’’

`டாடி கேடி’ சத்யராஜ் : 

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

``போன வருடம் ஏப்ரல் 1-ம் தேதி அன்னைக்கு என் மனைவி செளமியாவை `ஏப்ரல் ஃபூல்’ பண்ணலாம்னு சொல்லி நான் மொபைல்ல வேற யாரோ ஒரு பொண்ணுகிட்ட பேசுற மாதிரி சும்மா நடிச்சுக்கிட்டு இருந்தேன். அவங்க யார், என்னனு கேட்க, `சும்மா ஃப்ரெண்டு’னு பொய் சொல்ல, டப்புனு என் மொபைல் போன் சிதறிடுச்சு. நான் செளமியாவை ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு போய், என் மொபைல் போன் என்னை ஃபூல் பண்ணிடுச்சு. நல்ல வேலை... போனோட போச்சு.’’

அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்!

``நான் பொறந்ததே எங்க அம்மாவுக்கு `ஏப்ரல் ஃபூல்’ அனுபவம்தான். அம்மா டெலிவரிக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனப்போ, டாக்டர்ஸ் நான் ஏப்ரல் 1-ம் தேதி பிறந்திடுவேன்னு சொன்னாங்களாம். எங்க அம்மாவும் நான் அன்னைக்குப் பிறந்திடுவேன்னு நம்பி எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்களாம். ஆனா, நான் அன்னைக்குப் பிறக்கவே இல்லை. ஏப்ரல் 8-ம் தேதிதான் பிறந்தேன். எப்போ, ஏப்ரல் 1 வந்தாலும், எங்கம்மாவுக்கு இதுதான் ஞாபகத்துக்கு வரும்.’’