Published:Updated:

``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்!

சனா
``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்!
``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்!

நாடளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டு வரும் வேளையில் பலதரப்பட்ட கட்சிகளும் பரபரப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சில மணி நேரங்களுக்கு முன்பு `எந்தச் சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப் போகிறேன் என்பதனை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறேன் என்பது போல் ட்வீட் தட்டியிருந்தார். இதனால், இவரது அரசியல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில் பார்த்திபன் அவரது முடிவை அறிவித்து விட்டார். ஆனால், இவரது அறிவிப்பை பார்த்த பலரும் ஏமாற்றமடைந்ததே மிச்சம். `வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என்ற ரீதியில் படம் ஒன்றைப் போட்டு, அதில் ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும். ' என்று பதிவு செய்திருக்கிறார்.

அவர் இயக்கி நடிக்கப் போகும் 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்துக்கு இது புரோமோஷன் மாதிரியே இருந்தது. எந்தவொரு விஷயத்திலும் நய்யாண்டியை கையாளும் பார்த்திபன் இதிலும் தன்னுடைய கேலி, கிண்டல், நய்யாண்டியை கையாண்டு சப்புனு ஆக்கி விட்டார். 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..