Published:Updated:

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

Published:Updated:
"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

டிகர் சரவணன் - 'வைதேகி வந்தாச்சு’ துவங்கி 'வெட்டேத்தி சுந்தரம்’ வரை வெரைட்டி ரோல்களில் வெளுத்துக் கட்டுபவர். 'பருத்தி வீரன்’ மூலம்சீனியர் சித்தப்புவாக புரொமோஷன் ஆனவர். தனதுசொந்த ஊரான சேலம் - ஜங்ஷன் குறித்த தனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்!

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"
##~##

''நான் பிறந்து, வளர்ந்து அழிச்சாட்டியம் செய்தது சேலம் - ஜங்ஷன் ஏரியாவில்தான். போலீஸ் இன்ஸ்பெக் டரான என் அப்பா, என்னையும் போலீஸ் அதிகாரி ஆக்க ஆசைப்பட்டார். நான் சினிமா நடிகனாக ஆசைப்பட்டேன்.

முதலில் நான் நடித்தது என் தெருவில் உள்ள பெரிய கிணற்றுத் திடலில்தான். ஊர்ப் பொது மேடைபோல அந்த இடம் இருக்கும். அங்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, ரஜினி, கமல் என விதவிதமாக நடித்துக் காட்டுவேன். தெருவே கூடி கைத்தட்டி ரசிக்கும். கொஞ்சம்கூடக் கூச்சப்படாமல், கலர் கலராக ஜிகினா உடை அணிந்துகொண்டு பள்ளிக்கூடம் போவேன். பஸ் ஸ்டாப் தொடங்கி வகுப்பறை வரை இளம் பெண்கள் என்னைக் கண்டால் தெறித்து ஓடுவார்கள்.

எல்லோரும் என்னை அடாவடி என்று ஒதுக்கியபோது, ஓவிய ஆசிரியர் ராமனும் என்.எஸ்.எஸ். ஆசிரியர் தேவராஜு இருவரும் எனக்குள் இருக்கும் சினிமா ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, தொடர்ந்து பள்ளி நாடகங்களில் வாய்ப்புக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். நான் எட்டாவது படிக்கும்போது, சேலத்தில் பாரதிராஜா சாரின் 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வெற்றி விழா நடந்தது. கூட்ட நெரிசலில் அடித்துப் பிடித்து மேடை ஏறி, பாரதிராஜா சாரிடம் வாய்ப்புக் கேட்டேன். நாக்கைத் துருத்தி, 'படவா, இந்த வயசுல சினிமாவுல நடிக்கணுமாம்... ஓடிப்போயிடு’ என்று விரட்டினார்.

சினிமா ஆசை எனக்குள் படரக் காரணம், என் ஊர் சேலம்தான். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலம் சினிமா ரசிகர்களின் சொர்க்கம். நகரின் மையப் பகுதியில் மட்டுமே சுமார் 30 தியேட்டர்கள் இருந்தன. தெருவுக்குத் தெரு தியேட்டர்தான். அப்போது சேலம் மக்க ளின் பிரதான பொழுதுபோக்கே சினிமாதான். கோயிலுக்குப் போவதுபோல இரவுக் காட்சிக்கு பிள்ளைக் குட்டிகளைத் தூக்கிக்கொண்டு குடும் பத்துடன் தியேட்டருக்குப் போவார்கள். படம் ரிலீஸ் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் முதல் போன் சேலத்துக்குத்தான் வரும். இங்கு நல்ல ரெஸ்பான்ஸ் என்று தெரிந்தால் போதும்; அது கண்டிப்பாக வெற்றிப் படம்!

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

ஜங்ஷனில் இருந்து சாரதா மகளிர் கல்லூரி மார்க்கமாக ஓடும் என்.டி.7 பேருந்து எனது சொர்க்க வாகனம். 75 பைசாவுக்குச் சொகுசான இருக்கைகள், கலர்ஃபுல் பெயின்டிங், அதிரும் ஆடியோ, மாமூ, மச்சான், சித்தப்பு என்று அழைக்கும் நடத்துநர், ஓட்டுநர்கள்... தாவணியில் அழகழகான கல்லூரிப் பெண்கள் என்று தினசரி காலை, மாலைப் பயணம் களை கட்டும்.

ஜங்ஷன் அருகில் ஐந்து ரோட்டில் அப்போது இருந்த துவாரகா மற்றும் கோகுலம் ஹோட்டல்களை அறியாத சினிமா, அரசியல் பிரபலங்களே கிடையாது. பல ஏக்கர் பரப்பில் மரங்கள் நிறைந்து அடர்ந்த காடுபோல விரிந்து இருக்கும் அந்த ஹோட்டல்களில்தான் எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி எல்லோரும் தங்குவார்கள். உள்ளேயே நடைப் பயிற்சி செய்வார்கள். ஷட் டில் காக் விளையாடுவார்கள். நாங்கள் இதை காம்பவுண்டு சுவர் ஏறி வேடிக்கை பார்ப்போம். இன்று கோகுலம், மருத்துவமனையாகிவிட்டது. துவாரகா ஷாப்பிங் மாலாகக் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஒரு முறை 'என் உயிர் கண்ணம்மா’ படப் பிடிப்புக்காக இயக்குநர் சிவசந்திரனும் இளைய ராஜாவும் சேலம் வந்தார்கள். சினிமா வாய்ப்பு கேட்க அங்கு சென்றேன். அப்போதுதான் நடிகை லட்சுமி அம்மாவைச் சந்தித்து எனது முகவரி கொடுத்துவிட்டு வந்தேன். நீண்ட நாள் கழித்து எனக்குக் கடிதம் எழுதி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தவர் அவர்தான். இன்று சென்னைவாசி ஆகிவிட்டாலும் சேலத்தின் பால்யத்தை மறக்க முடியவில்லை!''

"சேலத்தில் ஓடினால் அது வெற்றிப் படம்!"

சந்திப்பு: ம.சபரி
படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்