Published:Updated:

பத்து வருடங்களுக்குப் பின் இணைந்த சல்மான் கான் - பிரபுதேவா!

பத்து வருடங்களுக்குப் பின் இணைந்த சல்மான் கான் - பிரபுதேவா!
பத்து வருடங்களுக்குப் பின் இணைந்த சல்மான் கான் - பிரபுதேவா!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் `தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் `தபாங்’ திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமான `தபாங் 2’ படத்தை அர்பாஸ் கான் இயக்கினார். இதைத் தொடர்ந்து, `தபாங் 3’ படத்தை பிரபுதேவா இயக்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால், பிரபுதேவாவும் சல்மான் கானும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இந்தப் படம் ஆரம்பிக்க தாமதமானது.

அலி அபாஸ் ஜாஃபர் இயக்கத்தில் கேத்ரீனா கைஃபுடன் `பாரத்’ படத்தை முடித்துள்ளார் சல்மான் கான். இதைத் தொடர்ந்து, `தபாங் 3’ படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியுள்ளது. `வான்டட்’ படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் இணைகிறது சல்மான் - பிரபுதேவா கூட்டணி. படப்பிடிப்பில் இருவரும் இருக்கும் புகைப்படத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சல்மான். 10 வருடங்களுக்குப் பிறகு, இந்த காம்போ ஒன்றுசேர்ந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.