Published:Updated:

`அடுத்ததா பாலிவுட் படம் இயக்கப் போறேன்!'- ரசூல் பூக்குட்டி

`அடுத்ததா பாலிவுட் படம் இயக்கப் போறேன்!'- ரசூல் பூக்குட்டி
`அடுத்ததா பாலிவுட் படம் இயக்கப் போறேன்!'- ரசூல் பூக்குட்டி

பாலிவுட் உலகில் முன்னணி சவுண்ட் டிசைனராக வலம் வருபவர் ரசூல் பூக்குட்டி. `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் மூலமாக ஆஸ்கர் விருதும் வாங்கினார். தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களான `கோச்சடையான்', `நண்பன்',  `எந்திரன்', `2.0' உள்ளிட்ட படங்களில் சவுண்ட் டிசைனராக வேலை பார்த்திருக்கிறார். 

பரப்பராக இயங்கி வரும் இவர் தற்போது `ஒரு கதை சொல்லட்டுமா' படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் ரசூல், ஒரு சவுண்ட் டிசைனர் கேரக்டரிலேயே நடித்திருக்கிறார். திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவுசெய்ய விரும்பும் சவுண்ட் டிசைனர் கேரக்டர். ராஜிவ் பனகல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளுக்காக சென்னை வந்த ரசூலிடம் பேசினேன். 

``ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு நேர்காணலில், 'அடுத்து உங்கள் லட்சியம் என்ன'னு எல்லோரும் கேட்டாங்க. `திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் பூரம் திருவிழாவின் ஒலிகளைப் பதிவு செய்யணும்'னு சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துதான் இந்தப் படத்தோட வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. படத்தின் மூலமாக என்னோட கனவும் நிறைவேறிடுச்சு'' என்றவரிடம், இதுக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பீங்களானு கேட்டபோது, ``அடுத்ததா பாலிவுட்ல ஒரு படம் இயக்கப் போறேன். உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வைத்து இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறேன்'' என்றார் ரசூல் பூக்குட்டி.

பின் செல்ல