Published:Updated:

''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்!'' - உருகும் விஜி சந்திரசேகர்!

வே.கிருஷ்ணவேணி

ராதிகா நடித்துவந்த 'சந்திரகுமாரி' கதாபாத்திரத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளார். இதுகுறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், ''திறமையுள்ள நடிகையான விஜி சந்திரசேகர் இந்தத் தொடரில் நடிக்க உள்ளார். அவருக்கு உங்களுடைய சப்போர்ட்டை எப்பவும் தொடர்ந்து கொடுக்கங்கள் எனவும், தினமும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்திர குமாரியைப் பாருங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு விஜி சந்திரசேகர் நன்றியைத் தெரிவித்ததோடு, ''உங்களுடைய ரசிகர்களின் வாழ்த்து என்னை நெகிழவைத்தது. உங்களுடைய ரசிகர்களோடு நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். உங்களுடைய ரசிகர்களை நடிப்பின்மூலம் சந்தோஷப்படுத்த முயல்கிறேன். உங்களுடைய ரசிகர்கள், எனக்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன். இப்போது, என்னை இன்னும் பொறுப்புடன் இயங்க வைத்திருக்கிறது '' என்பவர், 

''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்!'' - உருகும் விஜி சந்திரசேகர்!

''என்னுடைய சகோதரி ராதிகா, தற்போது தொடரில் இருந்து சின்ன பிரேக் எடுத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வருவார். மீண்டும் பழையபடி சந்திரகுமாரி ஒளிபரப்பான நேரத்திற்கே ஒளிபரப்பாகும்'' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்!'' - உருகும் விஜி சந்திரசேகர்!

''இதுவரை 6850 எபிசோடுகள், இந்த நாள் வரை நடித்துள்ளேன். 3430 மணி நேரம் இதுவரை டி.வி-யில் மட்டுமே நடித்துள்ளேன்.  நடிகைகளில் நான் ஒருத்தி மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளேன் என்பதில் பெருமைப்படுகிறேன். இரண்டு மாதம் பிரேக் எடுக்கிறேன். நான் மீண்டும் வரும்போது, பிரைம் டைம் 9.30 மணி ஷோவில் கண்டிப்பாக இணைவேன். உங்களின் அன்புக்கு நன்றி'' என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ராதிகா. தற்போது, ஆரவ் நடிக்கும் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்து வருகிறார்.  

''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்!'' - உருகும் விஜி சந்திரசேகர்!

ராதிகாவுக்குப் பதிலாக, 'சந்திரகுமாரி' தொடரில் களமிறங்கியிருக்கும் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.