Election bannerElection banner
Published:Updated:

`எழு வீரவனே..!' - ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ் மார்வெல் ஆந்தம் #AvengersEndgame

தார்மிக் லீ

`அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்காக இந்தியில் மார்வெல் ஆந்தம் ஒன்றையும் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். இந்த ஆந்தமானது நேற்று தமிழிலும் வெளியானது. விவேக் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியிருந்தார்.

`அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்துக்கான புரொமோஷன் வேலைகள் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. நேற்று அதற்காக நடந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஏ.ஆர்.ரஹ்மான், விவேக் போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரையும், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடிய தமிழ் ஆந்தத்தையும் அந்த நிகழ்ச்சியில் நேற்று வெளியிட்டனர். இதற்கு முன் ஆந்தம் இந்தியிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. `அவெஞ்சர்ஸ்' படத்தில் இடம்பெறும் அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியும், பிளாக் விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளனர். மேலும் `அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான வசனங்களை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு