Published:Updated:

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான் ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

வே.கிருஷ்ணவேணி

`புஷ்பாஞ்சலி', `அலைகள்', `பெண்', `அண்ணாமலை', `அழகி' எனத் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர், விஜி சந்திரசேகர். இதுவரை 37 சீரியல்களில் நடித்துள்ளார்.

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான்  ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்
" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான் ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

ராதிகா நடித்து வந்த `சந்திரகுமாரி' சீரியலில் ராதிகாவிற்கு மாற்றாக நடிக்கிறார், விஜி சந்திரசேகர். இது குறித்து அவரிடம் பேசினேன்.  

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான்  ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

``ஒரு சின்ன கதை சொல்லட்டுமா.. தன்னோட புற்றை பாம்பு ஒருபோதும் கட்டாது. எறும்புகள்தான் கட்டும். அதுக்குப் பிறகு, பாம்பு அதுல புகுந்து தங்கிக்கும். அப்படிக் கஷ்டப்பட்டு, செட் வேலைகளைப் பார்த்ததுல இருந்து, சீரியல் ரெடியானது வரை.. ராதிகா எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க, நான் நோகாம வந்து உட்கார்ந்துட்டேன்!"  எனச் சிரிக்கிறார், விஜி. 

``சில சீரியல்களுக்கு இடையில வர்ற நல்ல கேரக்டர் ரோல் ஒண்ணு பண்றீங்களானு கேட்பாங்க. ஆனா, என்னதான் நல்ல சீரியலா இருந்தாலும், இடையில நடிக்கிறதுல எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. பெரும்பாலும் தவிர்த்திடுவேன். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை எந்த சீரியலா இருந்தாலும், அதுல முதல்ல இருந்து நடிச்சாதான் திருப்தியா இருக்கும். ஆனா, `சந்திரகுமாரி' விஷயத்துல அதைப் பண்ண முடியல. ராதிகா மீது எனக்கு எப்போதும் பெரும் மரியாதை இருக்கு. ஹார்ட் வொர்க்கிங் வுமென் அவங்க.  என் வாழ்க்கையில இப்படி ஒருத்தரைப் பார்த்ததில்லை. முடியாததையும் முடிச்சுக் காட்டுவாங்க. அவங்க தரப்புல இருந்து கேட்டப்போ, முதல்ல முடியாதுனுதான் சொன்னேன். ஆனா, ராதிகா பெர்ஷனலா கேட்டப்போ என்னால மறுக்க முடியல. அவர் நினைச்சிருந்தா ஒரு க்ளைமாக்ஸ் வெச்சு சீரியலை முடிச்சிருக்கலாம். அப்படிப் பண்ணா, சீரியல்ல வேலை பார்த்த அத்தனை தொழிலாளர்களும் பாதிக்கப்படுவாங்க. அதனாலதான், சீரியலை முடிக்காம என்னை வெச்சுத் தொடர்கிறார். 

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான்  ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

நான் சின்னப் புள்ளையா இருக்கும்போதே ராதிகாவைத் தெரியும். ஆர்கானிக் ஃபார்மிங், மகள் நடிக்கிற படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு நான் நடிக்கிற படங்கள்... கொஞ்சம் பிஸியா இருந்தாலும், `சந்திரகுமாரி'யில கமிட் ஆகி நடிக்கிறதுக்குக் காரணம், ராதிகாதான். அவங்க ஒரு உதவினு கேட்டுட்டாங்க. இப்போ அவங்களுக்குப் பண்ணலைன்னா, வேற எப்போ பண்றது?" என்றவர், ராதிகா சீரியலிலிருந்து விலகியதற்கான காரணத்தைச் சொன்னார். 

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான்  ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

``அவங்களுக்கு வேறொரு புது புராஜெக்ட் வந்ததுதான், இந்த சீரியல்ல தொடர முடியாம போனதுக்குக் காரணம். அவங்க எனக்கு சகோதரி மாதிரி. அதனால, ஒரு வேகத்துல ஓகே சொல்லிட்டேன். ஆனா, எனக்கு `சந்திரகுமாரி'யில அவங்க கேரக்டரை ரீபிளேஸ் பண்றதுக்குப் பயமாதான் இருக்கு. ராதிகா என்ற லெஜெண்ட்டை என்னால கொண்டுவர முடியுமா, தெரியாது. முதல் எபிசோடு முடிஞ்சதும் இன்ஸ்டாகிராம் `லைவ்'வில் வந்தேன். சீரியல் ஆடியன்ஸ் எல்லோரும், `நீங்க நடிக்கிறது திருப்தியா இருக்கிறதா சொன்னாங்க. யாரும் நெகட்டிவா ஃபீல் பண்ணல. அதுவே எனக்கு பாசிட்டிவா இருந்தது. 

" 'சந்திரகுமாரி' சீரியல்ல ராதிகாவுக்குப் பதில் நான்  ஏன் நடிக்கிறேன்..!?’’ - விளக்குகிறார் விஜி சந்திரசேகர்

`அழகி' சீரியலுக்குப் பிறகும் `சுந்தரி அம்மா'வை யாரும் மறக்கல. அந்த ஆடியன்ஸூம் இப்போ என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கேப் கொடுத்துட்டு வரும்போது, எதிர்பார்ப்பு வேறமாதிரி இருக்கும். அப்படித்தான் இப்போ இருக்கு. ராதிகாவும் ரெண்டு மாசம் கழிச்சு வேற ஒரு ப்ரைம் டைம் சீரியல்ல என்ட்ரி கொடுப்பாங்க. அதுக்கான வேலைகள்லதான் மும்முரமா இருக்காங்க.

அவங்களுக்கு இப்போ கொஞ்சம் பிரேக் தேவைப்படுது. பல வருடமா இந்தத் துறையில இருக்காங்க. நானும், ராதிகாவும் ஒரே ஏரியாவில் குடியிருக்கோம். அவங்களுக்கு என் வீட்டுக்கு வர்றதுன்னா, அவ்ளோ பிடிக்கும்." என்கிறார், விஜி சந்திரசேகர்.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.