Published:Updated:

`கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்னதும் அவர் அம்மாவே பிறக்கப்போறாங்கன்னு எமோஷனலாகிட்டார்!' - நெகிழும் சுஜா

வெ.வித்யா காயத்ரி
`கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்னதும் அவர் அம்மாவே பிறக்கப்போறாங்கன்னு எமோஷனலாகிட்டார்!' - நெகிழும் சுஜா
`கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்னதும் அவர் அம்மாவே பிறக்கப்போறாங்கன்னு எமோஷனலாகிட்டார்!' - நெகிழும் சுஜா

`பிக்பாஸ்' பிரபலம் சுஜா வருணி. அவருடைய காதல் கணவர் நடிகர் சிவக்குமார். கடந்த நவம்பர் மாதம் இந்த நட்சத்திர தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது சுஜா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தியை சிவக்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக சுஜாவிடம் பேசினோம்.

``எங்களுடைய வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் இது. சிவா அத்தானுக்கு அவங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். நான் கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்ன உடனேயே, `என் அம்மாவே மறு ஜென்மம் எடுத்து நமக்குக் குழந்தையாகப் பிறக்கப் போறாங்க'ன்னு சந்தோஷத்தில் அழுதுட்டார். இந்த எமோஷனல் மொமன்ட்ஸை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது வேற மாதிரியான ஃபீல். அப்பாவாகப் போகிறோம் என்கிற சந்தோஷத்தை விட அவருடைய அம்மா திரும்பி வரப் போறாங்கங்குற சந்தோஷம் அதிகமா இருந்தது. நானும், அவரும் எங்க குழந்தைக்கு நல்ல அம்மா, அப்பாவாக இருக்கணும்னு நினைக்கிறோம். இப்போ ஐந்தாவது மாதம் நடந்துட்டு இருக்கு.

`கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்னதும் அவர் அம்மாவே பிறக்கப்போறாங்கன்னு எமோஷனலாகிட்டார்!' - நெகிழும் சுஜா

பொதுவாகவே சிவா அத்தான் ரொம்ப கேரிங்கான பர்சன். இப்போ கேர் இன்னும் அதிகமாகியிருக்கு. எனக்கு அம்மா, அப்பாவாக இருந்து என்னைப் பார்த்துக்கிறதெல்லாமே அவர்தான்! எனக்கு என்னென்ன பிடிக்குமோ அதெல்லாம் பண்ணிக் கொடுத்துட்டு இருக்கார். கணவராக இருக்கும்போது நான் பார்த்த அத்தானுக்கும், இப்போ அப்பாவாக நான் பார்க்கிற அத்தானுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. எங்க ரெண்டு பேருக்குமே பொறுப்பு அதிகமாகியிருக்கு. ரெண்டு பேருடைய வீட்டிலும் ரொம்ப ஹாப்பியா இருக்காங்க. 

குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஓரளவு பாப்பா வளர்ந்ததும் உனக்கு பிடிச்ச துறையில் நீ தொடர்ந்து இயங்கணும்.. எதுக்காகவும், யாருக்காகவும் உன் கேரியரை விட்டுக் கொடுக்கக் கூடாது. நீ நல்ல பர்ஃபார்மர் என்பதை ப்ரூஃப் பண்ணணும்னு சிவா அத்தான் அடிக்கடி என்னை ஊக்கப்படுத்துவார். இந்தச் சமூகத்தில் எங்களுடைய குழந்தையை நல்லா வளர்க்கணும்னு ஆசை'' எனத் தாய்மையில் பூரிக்கிறார்!

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.