Published:Updated:

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

தமிழின் முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படமான `சபாபதி', மூன்று தீபாவளிகளைக் கண்ட `ஹரிதாஸ்', சமூக அரசியல் நிலையை கேலி செய்த `முகமது பின் துக்ளக்', தமிழின் முதல் மறுஜென்ம திகில் திரைப்படமான `நெஞ்சம் மறப்பதில்லை' எனச் சொல்லிக்கொண்டே போக தமிழில் நூற்றுக்கணக்கான கிளாசிக் படங்கள் இருக்கின்றன.

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

தமிழின் முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படமான `சபாபதி', மூன்று தீபாவளிகளைக் கண்ட `ஹரிதாஸ்', சமூக அரசியல் நிலையை கேலி செய்த `முகமது பின் துக்ளக்', தமிழின் முதல் மறுஜென்ம திகில் திரைப்படமான `நெஞ்சம் மறப்பதில்லை' எனச் சொல்லிக்கொண்டே போக தமிழில் நூற்றுக்கணக்கான கிளாசிக் படங்கள் இருக்கின்றன.

Published:Updated:
``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

ப்போது, பல நூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான சரித்திரப் படங்களும், நடப்பு அரசியல் கூத்துகளைப் பகடி செய்யும் படங்களும் தொடர்ந்து தமிழ்சினிமாவில் வந்தவண்ணம் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அரசியல் வெற்றிடங்களாலும் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவை எதுவும் இல்லாமல் 1950,1960-களிலேயே மேற்சொன்ன விஷயங்களைப் பரிசோதித்துப் பார்த்த எவர்கீரின் க்ளாசிக் தமிழ்சினிமாக்கள் இதோ!

சந்திரலேகா

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க இரண்டு லட்சம் ரூபாய் போதுமானதாக இருந்த காலகட்டத்தில், முப்பது லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது, `சந்திரலேகா' திரைப்படம். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்ததோடு, இயக்கவும் செய்தார், எஸ்.எஸ்.வாசன்.

`ஜெமினி கதை இலாகா'வைச் சேர்ந்தவர்கள், இரவு-பகல் பாராமல் பல மாதங்கள் கதை விவாதத்தில் ஈடுபட்டு, `சந்திரலேகா' கதையை உருவாக்கினார்கள். படத்தில் வரும் சர்க்கஸ் காட்சியில் நடிக்க நிஜ சர்க்கஸ் குழுவே வேண்டும் என வாசன் சொல்ல, சர்க்கஸ் குழுவைத் தேடி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் செய்து ஒரு சர்க்கஸ் குழுவை ஒப்பந்தம் செய்தார்கள். `சந்திரலேகா' திரைப்படம் உருவான சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் எங்கு பார்த்தாலும் குதிரைகள், யானைகள், புலிகள், சிங்கங்கள், நூற்றுக்கணக்கான தையல் கலைஞர்கள், தச்சு வேலைத் தொழிலாளர்கள் எனக் கண்கொள்ளாக் காட்சியாக, பார்க்கவே அவ்வளவு பிரமாண்டமாக இருக்குமாம்.

`சந்திரலேகா' படத்தில் வரும் பிரமாண்டமான முரசு ஆட்டமும், படத்தின் இறுதியில் எம்.கே.ராதா-ரஞ்சன் போடும் கத்திச் சண்டையும் இப்போது பார்த்தாலும் பிரமிக்க வைக்கும். அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம் அதிகபட்சம் பத்து ஊர்களில்தாம் வெளியாகும். அங்கு ஓடி முடிந்தபிறகு, அந்த படப்பெட்டி அடுத்த ஊருக்குப் போகும். ஆனால், `சந்திரலேகா' 120 ஊர்களில் வெளியானது. தமிழில் பெருவாரியான வசூல் இல்லை எனினும், சில மாற்றங்களுடன் இந்தியில் `டப்' செய்யப்பட்ட `சந்திரலேகா' வசூலைக் குவித்தது.

அந்த நாள்

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது, அகிரா குரோஷோவா இயக்கிய உலகப் புகழ்பெற்ற `ரோஷமான்' படத்தைப் பார்த்தார். முன்னும், பின்னும் என்ன நடந்திருக்கும் என்று நாலைந்து பேர் `ஃப்ளாஷ்பேக்'கில் சொல்வதுபோல புதிய உத்தியுடன் வெளிவந்த படம் அது. அந்த உத்தியில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஏவி.எம் அதே பாணியில் தமிழில் ஒரு படத்தைத் தயா‌ரிக்க முடிவு செய்தார். ஜாவர் சீதாராமன் கதையை உருவாக்க, எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் உருவானது, `அந்த நாள் 'திரைப்படம்.

ஆடல், பாடல் இல்லாமல் தமிழில் உருவான முதல் திரைப்படம் இது. படித்தவர்களும், புதுமை விரும்பிகளும் இந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். கிராமத்து மக்களுக்கு இந்தக் கதையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்ததால் கிராமங்களில் இந்தப் படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.

பராசக்தி

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம், `பராசக்தி'. வெளியான முதல் நாள், இப்படம் பற்றிப் பரபரப்பாக எதுவும் பேசப்படவில்லை. ஆனால், மறுநாள் திரும்பிய திசையெல்லாம் பராசக்தி பற்றிய பேச்சுதான் ஹைலைட்டாக இருந்ததாம். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார், சிவாஜி கணேசன். கருணாநிதியின் திரைக்கதை - வசனமும், சிவாஜி கணேசனின் நடிப்பும் `பராசக்தி'யை மாபெரும் வெற்றிப்படமாக்கியது.

பூசாரி, `யார் அம்பாளா பேசுவது?' என்று கேட்க, அதற்கு சிவாஜி சொன்ன `அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?' வசனம், `கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக!' போன்ற வசனங்களை சிவாஜி பேசும்போது, ரசிகர்களின் கைதட்டலாலும், ஆரவாரத்தாலும் அதிர்ந்தது. தவிர, `பராசக்தி'யின் வசனம் புத்தகமாகவும், இசைத்தட்டாகவும் வெளியாகி பரபரப்பாக விற்பனையானது. 

நவராத்திரி

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த திரைப்படம், `நவராத்திரி'. இது அவரது நூறாவது படம் என்பது கூடுதல் சிறப்பு. `சிவாஜியின் நூறாவது படமாக இருக்கப்போவதால், அவரது நவரச நடிப்புத் திறனை வெளிக்கொணரும் விதத்தில் கதையைத் தயார் செய்ய வேண்டும்' என முடிவு செய்த இயக்குநர் நாகராஜன், மிகுந்த சிரத்தையுடன் சிறப்பான வடிவில் `நவராத்திரி' கதையை உருவாக்கினார்.

கதாநாயகி சாவித்திரிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு, அவர் ஒன்பது விதமான மனிதர்களைச் சந்திக்கிறார். அந்த ஒன்பது கதாபாத்திரங்களையும் சிவாஜி ஏற்றுக்கொண்டார். திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது `நவராத்திரி' திரைப்படம். 

நாடோடி மன்னன்

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

ஜெமினியின் `சந்திரலேகா'வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம், `நாடோடி மன்னன்'தான். `எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' குழு கதையை உருவாக்க, இரட்டை வேடங்கள் ஏற்று முதன்முறையாக இயக்கத்திலும், தயாரிப்பிலும் கால்பதித்தார், எம்.ஜி.ஆர். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக தன் சொத்துகளை அடமானம் வைத்துப் பணத்தைத் திரட்டினார் எம்.ஜி.ஆர்.

படத்தில் இடம்பெற்ற `தூங்காதே தம்பி தூங்காதே', `சம்மதமா' முதலான பாடல்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தன. ஏற்கெனவே, `வசூல் சக்கரவர்த்தி' எனப் பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர், இந்தப் படத்தின் மூலம் `தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னன்' என்று புகழப்பெற்றார். 

ரத்தக்கண்ணீர்

``சந்திரலேகா, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன்... தமிழ்சினிமா வின்டேஜ் ஹிட்ஸ்!''

நாகரிகம் என்னும் பெயரில் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட ஒரு மனிதனின் கதையே `ரத்தக்கண்ணீர்'. எம்.ஆர்.ராதா தனது அறிமுகக் காட்சியிலேயே அந்தப் பணக்காரத் தோரணை, திமிர் என நடிப்பில் அசத்தியிருப்பார். படத்தில் வரும் வசனங்களை எழுதிய திருவாரூர்.கே.தங்கராசு, பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அந்தத் தாக்கம், `ரத்தக்கண்ணீ'ரில் வரும் வசனங்கள் அனைத்திலும் வெளிப்படும். 

ஒரு காட்சியில், `ஜீவகாருண்யக் கட்சியைச் சேர்ந்தவங்களா? அப்படின்னா என்னப்பா அர்த்தம்?’என்று எம்.ஆர்.ராதா கேட்க, `நாங்க உயிர்களைக் கொல்லமாட்டோம்’என்று அவர்கள் சொல்ல, `ஓஹோ.. ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?’ என்று நக்கலடிப்பார், ராதா. இப்படிப் பல வசனங்கள் மூட நம்பிக்கையைக்கு எதிராக நிற்கும். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் பழைய படத்தைப் பார்க்கும் உணர்வு வராது என்பதுதான், இப்படத்தின் அதிசிறப்பு. 

மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாது, தமிழின் முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான `சபாபதி', மூன்று தீபாவளிகளைக் கண்ட `ஹரிதாஸ்', சமூக அரசியல் நிலையைக் கேலி செய்த `முகமது பின் துக்ளக்', தமிழின் முதல் மறுஜென்ம திகில் திரைப்படமான `நெஞ்சம் மறப்பதில்லை' எனச் சொல்லிக்கொண்டே போக தமிழில் நூற்றுக்கணக்கான கிளாசிக் படங்கள் இருக்கின்றன. உலக சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்க்கும் அதேசமயம், தமிழில் வெளியான இதுபோன்ற அரிய கிளாசிக் படங்களையும் பார்க்கலாம். இதுபோல, உங்களுக்குத் தெரிந்த கிளாசிக் தமிழ் சினிமாக்களைக் கமென்ட் பாக்ஸில் ரெகமெண்டு செய்யலாமே?!