Published:Updated:

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

வே.கிருஷ்ணவேணி

`லொள்ளு சபா' பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த நகைச்சுவைத் தொடர். அந்தத் தொடர் தற்போது மறுபடியும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்
"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

`லொள்ளு சபா' முதல் பகுதியில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், சந்தானம். அவருடைய கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கவிருக்கிறார், அமுதவாணன். கூடிய விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது, `லொள்ளு சபா 2'. `ஜோடி நம்பர் 1'ன் டைட்டில் வின்னர், `கலக்கப்போவது யாரு 3'  டைட்டில் வின்னர். பிறகு, `தாரை தப்பட்டை' படத்தில் நடித்தார். தற்போது, `லொள்ளு சபா'வில் களமிறங்கவிருக்கிறார், அமுதவாணன். அவரிடம் பேசினேன். 

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

``பாலாஜிதான் முதன் முதலில் லொள்ளு சபா பண்ணார். அதற்குப் பிறகு சந்தானம். இப்போ பத்து வருடத்துக்குப் பிறகு நான் பண்ணப்போறேன். இந்த வாய்ப்பு கிடைச்சது தெரிஞ்சதும் செம்ம சந்தோஷமாக இருந்தது. பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி எனப் பலரும் இதில் நடிக்கிறோம்." என்றவர், தொடர்ந்தார். 

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

``முன்பு ஒளிபரப்பான `லொள்ளு சபா'வை ராம்பாலா இயக்கியிருந்தார். இப்போது `அது இது எது' தாம்சன் இயக்குகிறார். சந்தானம் ரோலை இப்போ நான் பண்றேன். என்னைப் பொருத்தவரை இது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய பொறுப்பு. நல்ல ஹிட்டடித்த தொடரின் அடுத்த எதிர்பார்ப்பு என்ற இடத்தில் இருக்கிறேன். `லொள்ளு சபா பார்ட் 2' பண்ற ஐடியா ஒரு வருடமா இருந்தது. நான் பன்ணப்போறதை எனக்கு நாலு மாசம் முன்னாடி சொன்னாங்க.

ஒரு மீட்டிங் இருக்கு வந்திடுங்கனு சொல்லியிருந்தார், தாம்சன் சார். அதில், `லொள்ளு சபா' குறித்துப் பேசிக்கொண்டிருந்தப்போ, `இந்த ஷோவின் லீட் ரோலை அமுதவாணன் பண்ணட்டும்'னு சொன்னார். இப்படி ஒரு ஷோவுக்கு என் பெயரைச் சொல்லுவாங்கனு கொஞ்சமும் எதிர்பார்க்கல. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஒரு மீட்டிங் நடந்தது. ஒரு நிமிடம் காற்றில் பறப்பதாக உணர்ந்தேன்.

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

இந்தத் தொடரைப் பொறுத்தவரை வாய்ஸ், பாடி லாங்குவேஜ், டான்ஸ் அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கும். எந்த கெட்டப் போட்டாலும், அதுக்கு ஷுட் ஆகணும். நான் `செட் ஆவேன்'னு நினைச்சு செலக்ட் பண்ணியிருக்காங்க. அதைச் சிறப்பா பண்ணணும், பண்ணுவேன்னும் நம்புறேன். `லொள்ளு சபா 2' ஷூட்டிங் அவுட்டோர்ல பிளான் பண்ணியிருக்காங்க. `லொள்ளு சபா' முதல் எபிசோடிலிருந்தே பார்த்திருக்கேன். அதற்கு ஸ்கிரிப்ட் பண்ணும்போது, நான் பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்த பையன். பாலாஜிதான் சந்தானத்திற்கு குரு. அவர் இப்போ உயிரோட இல்லை. பம்மல் ஏரியாவுல நான் படிச்சுக்கிட்டிருக்கும்போது, பக்கத்து வீட்டுல குடியிருந்தவர். அவர்தான் எனக்குப் பேச்சுப் போட்டிக்கு எழுதிக் கொடுத்து ஊக்குவித்தவர். அவர்கூடவே இருந்திருக்கேன். ஜெயா டி.வியில் மாறன் என்பவர் ஒரு ஷோ பண்ணார். அவரும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர். இன்னைக்கு அவங்க இடத்தில் நான் இருக்கிறேன்னு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு!" என்றவரிடம், ``என்னதான் பல கேரக்டர்களைக் காப்பி பண்ணாலும், அமுதவாணன்னாலே ராமராஜன்தானே ஞாபகத்துக்கு வர்றார்?" எனக் கேட்டேன். 

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

``விஜய், அஜீத், சூர்யா, கமல், சரத்குமார், நெப்போலியன்னு பலபேரை இமிடேட் பண்ணியிருக்கேன். அதிகம் இமிடேட் பண்ணது ராமராஜன் சாரை!. விஜய், அஜீத் மாதிரி பண்ணா `சூப்பர்பா'னு சொல்லமாட்டாங்க.  ஏதாச்சும் குறை சொல்வாங்க. ராமராஜன் கெட்டப்பை அதிகம் ஏத்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்படித் தோணுதுனு நினைக்கிறேன். 

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

`ஜோடி' டைட்டில் வின் பண்ணியிருக்கேன், `கலக்கப்போவது யாரு 3' சாம்பியன் ஆகியிருக்கேன், விஜய் டிவி டெலி அவார்டு வாங்கியிருக்கேன். `பில்லா 2', `தாரை தப்பட்டை' படத்துல நடிச்சிருக்கேன். கிட்டத்தட்ட எல்லோருடைய வாய்ஸ் மற்றும் பாடி லாங்குவேஜையும் பண்ணியிருக்கேன். `ஜோடி' முடிச்ச உடனே `தாரை தப்பட்டை' வந்தேன். அது முடிக்கிறதுக்குள்ள `தர்மதுரை' படத்தில் கமிட் ஆனேன்.'' என்பவர் அந்த வாய்ப்புக் கைநழுவிப் போயிடுச்சு என்கிறார், சோகமாக! 

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

``விஜய் சேதுபதி கூடவே இருக்கிற மாதிரி ஒரு ரோல் அது. அப்போ, கனடாவுல ஒரு நிகழ்ச்சியில் இருக்க வேண்டிய சூழல். ரெண்டும் ஒரே தேதியில வந்துட்டதுனால, அந்தப் படம் மிஸ் ஆகிடுச்சு `கத்திச் சண்டை' படத்துலகூட வடிவேலு கூடவே வர்ற மாதிரி ஒரு ரோல் மிஸ் ஆச்சு. இப்படிப் பல வாய்ப்புகளை மிஸ் பண்ணேன்.  

"நேரமே சரியில்லைனு சொன்னாங்க. 'லொள்ளு சபா' கைகூடி வந்திருக்கு!" - அமுதவாணன்

எந்த ஒரு விஷயமும் எனக்குக் கிடைக்கிறதுக்கு முன்னாடி, என்னைப் போட்டு வதக்கி எடுத்துடும். ஆனா, கடைசியில் கிடைக்க வேண்டியது கிடைச்சிடும். `ஜோடி' ஷோவில் எனக்குக் குயிலி மேடம்தான் ஜோடி. அம்மா மாதிரி இருக்கிறவரை ஜோடியாப் போட்டுட்டாங்களேனு நினைச்சா, அதுதான் பிளஸ்ஸா அமைஞ்சது. 

குயிலி, ஷிவானி என நான்கு ஜோடிகள் மாறிடுச்சு. நான் உட்பட பலபேர், எனக்கு நேரமே சரியில்லைனு நினைச்சாங்க. நான் எலிமினேஷன் ஆனப்போ, மக்கள்  என்னை மறுபடியும் உள்ளே வரச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பிறகு, வைல்ட் கார்டில் உள்ளே வந்தேன். கடைசி எபிசோடில் ஜோடியாக வந்தவர், ஆனந்தி. அதையொட்டியே எங்களுக்கு `தாரை தப்பட்டை' வாய்ப்பு கிடைத்தது.'' என்று முடிக்கிறார். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.