Published:Updated:

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்
"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

தனது வாழ்க்கை, சினிமா பயணம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், காமெடி நடிகர் `லொள்ளு சபா' மனோகர்.

`சொல்லுங்கோ..' எனக் கைகளைச் சுத்தி, முட்டைக் கண்ணைப் பிதுக்கிக் காட்டினாலே தெரிந்துவிடும், இது `லொள்ளு சபா' மனோகர் ஆக்‌ஷன்தான் என்று! `சிலுக்குவார் பட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

``பெரும்பாலும், `நடிப்பு எனக்கு தற்செயல்'னு பலபேர் சொல்வாங்க. எனக்கு அப்படியும் சொல்ல முடியாது, பிளான் பண்ணி வந்தேன்னும் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனா, என்னுடைய கற்பனையும், தமிழ் மீது இருந்த பற்றும்தான் இங்கே என்னை கைப் புடிச்சி இட்டாந்துச்சு. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கார்ப்பொரேஷன் பேங்க்லதான் வேலை பார்த்தேன். அதை விட்டுட்டுத்தான் சினிமாவுக்குள்ளே வந்தேன். எனக்கு சென்னைதான் எல்லாமே. இதுதான் எனக்கு மிகப்பெரிய சொர்க்கம். ராயபுரம் என் வாழ்க்கையின் பெரிய மகுடம். ஸ்கூலிங்னு எல்லாமே ராயபுரத்தைச் சுத்தித்தான். சென் டேனியல் எலிமன்ட்ரி ஸ்கூல்ல ஒண்ணாம் வகுப்புல இருந்து அஞ்சாம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்கப்புறம் பசங்க அங்க படிக்க அனுமதியில்ல. அதனால எதிர்த்தாப்புல இருக்கிற செயின்ட் பீட்டர் ஸ்கூல்ல ஆறாம் வகுப்பு சேர்ந்து படிச்சேன். எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. அதுக்கப்புறம் வேணாம்னு 500 மீட்டர் தூரத்துல இருக்கிற கார்ப்பொரேஷன் ஸ்கூல்ல போய்ச் சேர்ந்துட்டேன். அங்கதான் என் வாழ்க்கைக்கான பாதையை அமைக்க ஆரம்பிச்சேன்.'' என்பவரின் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

``அங்கேதான் திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர் கவியரசர்.பொன்னிவளவன் எங்களுக்குத் தமிழ் வாத்தியாரா வந்தார். அவர்கிட்டதான் தமிழ் படிச்சேன். அவருடைய ஒவ்வொரு வகுப்பும் எங்களை எங்கேயோ கொண்டு போயிடும். அப்படி நடத்துவாரு மனுஷன். சொல், யாப்பு, அணி இலக்கணம்னு ஐந்து இலக்கணங்கள் படிச்சாலே தமிழ் மொழியில் சிறந்து விளங்கலாம்னு சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தெடுத்தார். இந்த இலக்கணங்களைப் படிச்சா கவிதையே எழுதலாம்னு சொல்வாங்க. அதனால, எப்படியும் தமிழை முழுக்கக் கத்துக்கலாம்னு முடிவெடுத்தேன். அவருடைய ஒரு வகுப்பைக்கூட நான் மிஸ் பண்ணதே கிடையாது. எழுவாய், பயனிலை, பொருள், எதுகை, மோனை இவையெல்லாம் அமைந்தாலே ஒரு கவிதை உருவாகிடும்னு சொல்வார். 

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

சின்ன மேட்டரை எடுத்துகினு இதையெல்லாம் பயன்படுத்தி எழுதணும். இப்படி இன்னைக்கும் எங்களுக்கு தமிழ் மீதான ஆர்வம் குறையாமல் காத்தவர் பொன்னிவளவன். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு பொன்னிவளவன் பாடம் நடத்தினார். `நாவசைந்தால் நடை அசையும்'னு சொல்வாங்க. அந்த அசைவுகளை அப்படியே உத்துப் பார்த்துட்டு இருப்பேன். இப்படி பாடத்தைக் கூர்ந்து கவனிக்க இப்போது மாணவர்களும் இல்லை, அப்படிப் பாடம் நடத்தும் ஆசிரியர்களையும் பார்க்க முடியல.'' என சோகமானவர், தொடர்கிறார். 

``ஏதோ தமிழ் படிச்ச தைரியத்துல ஒரு புத்தகத்துக்கு சிறுகதை எழுதுனேன். அந்தச் சிறுகதை எட்டு பக்கம் இருக்கணும். ஒருவழியாக கதை முடிக்கிற நேரம், எப்படி அந்தக் கதையை முடிக்கிறதுனு தெரியல. அதுக்காக தூங்காம கொள்ளாம நைட் எல்லாம் அழுவேன் பாருங்க.. பெரிய எழுத்தாளரு மாதிரி!. எப்படியோ ஒருவழியா அதுக்கு முடிவு எழுதுன பிறகுதான் தூக்கமே வந்தது. அப்படி நிறைய அனுபவம் இருக்குங்கோ.

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

`மனிதனுக்கு சிந்தனை முக்கியம். முதலில் சிந்திக்கத் தெரியணும். சிந்திச்சாதான் பெரிய ஆளாக முடியும்'னு அப்துல்கலாம் சார் சொல்வார். இன்னிக்கு ஒரு கார்ப்பொரேஷன் ஸ்கூல்ல படிச்ச என்னை ஒரு நடிகனாக்கியிருக்குனா, அதுக்குப் பொன்னிவளவன் ஐயாவுக்குத்தான் நன்றி சொல்லணும். இன்னிக்கு எல்லா விஷயத்தையும் நல்லவைகளாகப் பார்க்க ஆரம்பிக்கக் காரணமாக இருப்பது அப்துல்கலாம் ஐயாவின் சொற்கள். இப்படி எழுத்தாளராக, கவிஞராக மாறணும்னு நினைச்சேன். நான் கதை எழுதும்போது கற்பனையில நடிகனாக மாறினேன். அதுவே என்னை எதிர்காலத்துல நடிகனாக்கிடுச்சி." என்றவரிடம், ``உங்க  பாடி லாங்குவேஜ் எப்படி வந்தது?" என்றேன். 

``ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒருவகையில ஆண்டவனின் கொடுப்பிணை இருக்கும். அது என்னை அறியாமலேயே வந்து சேர்ந்தது. `லொள்ளு சபா' டைம்லதான் இந்த பாடி லாங்குவேஜ் அமைஞ்சது. அப்போ விஜய் டிவிக்கு குதிரை சிம்பல் இருக்கும். `ஒருபடப் பாடல்' பண்ணினேன். அந்த நேரத்துல இப்படிக் கைகளைச் சுழற்றிச் சுழற்றிப் பேச ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகுதான் `லொள்ளு சபா' வாய்ப்பு. என் பாடி லாங்குவேஜ் இந்தளவுக்கு ரீச் ஆகக் காரணம், `லொள்ளு சபா' டைரக்டர் ராம்பாலா சார்தான். அவருக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங். என்னை இப்படித்தான் கொண்டு வரணும்னு ஒவ்வொரு ஷாட்டிலும் மாற்றுவார்.  

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

சொன்னா நம்பமாட்டீங்க. எனக்குக் குரல் நல்லா இருக்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்ல சத்தமா கத்தச்சொல்வாருங்க. அப்படியே ஆக்டிங்கையும் கொண்டுவரணும்னு சொல்வார். அப்போ இருந்த மனோகருக்கும், இப்போ இருக்கிற மனோகருக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. சோகம், அழுகைனு எந்தக் காட்சியில எப்படி இருக்கணும்னு அவர்தான் சொல்லிக்கொடுத்தார்.'' என்றவரிடம், இவரது முதல் பட அனுபவம் கேட்டேன். 

` ``காதல் எஃப்.எம்'தான் என் முதல் படம். ஆரம்பத்துலயே சினிமாவுல நடிக்கத்தான் ட்ரை பண்ணேன், நாடக வாய்ப்புதான் கிடைச்சது. அப்போல்லாம் ரெண்டு ரூபாய் கொடுத்தாதான் வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும். அந்த ரெண்டு ரூபாய்க்குச் சாப்பிட்டுட்டு, நாயா பேயா வாய்ப்பு தேடி அலையணும். கார்ப்பொரேஷன் பேங்க்ல வேலை பார்த்ததுனால, கையில பணம் இருந்தாலும், வாய்ப்பு அவ்ளோ ஈஸியா அமைஞ்சுடல. விஜய் டிவில தொடர்ந்து `லொள்ளு சபா'வுல கான்சப்டு பிடிச்சுப் பண்ண ஆரம்பிச்சது, என்னை மக்கள் மனசுல பதிய வெச்சது." என்பவருக்குக் காதல் அனுபவமும் இருக்கிறது.

``சின்ன வயசுல வழியில வர்றமாதிரி ஒரு லவ் வந்து, அப்படியே கிராஸ் பண்ணிட்டுப் போயிடுச்சு. இன்னிக்கும் காதல் பண்ணிக்கிட்டிருக்கிறது, திரை உலகத்தைத்தான். `த்ரிஷா இல்லனா நயன்தாரா', `எனக்கு இன்னோரு பேர் இருக்கு' படங்களில் வாய்ப்புக் கொடுத்தவர் ஜி.வி பிரகாஷ் மற்றும் டைரக்டர்ஸ்தான். மாசத்துக்கு பத்து நாள்கள் பிஸியாதான் ஓடிக்கிட்டு இருப்பேன்." என்றவர், உடன் நடித்த மற்ற நடிகர்களைப் பற்றியும் சொன்னார்.

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

``உதயநிதி ஸ்டாலின் ரொம்ப அன்பு செலுத்துவாரு. சிம்பு,' AAA' படத்துக்குப் பிறகு, `இனிமே எல்லாப் படத்திலும் ஒண்ணு சேர்றோம்ணே. அதுக்கு முன்னாடி ஒருநாள் பார்ட்டிக்குப் போலாம்'னு சொல்லியிருக்கார். சந்தானமும் அப்படித்தான் அன்பு செலுத்துவார். நேரில் ஜாலியா எதையாவது பேசிட்டிருப்போம். `வேலாயுதம்' படத்துல `என் பொணத்த தாண்டித்தான் போகணும்'னு சந்தானம் சொல்வார். அந்த சீன்ல நானும் நடிக்க வேண்டியது, முடியாமப் போயிடுச்சு. `வேலாயுதம்' படத்தில் நடிச்சதைப் பார்த்துட்டு, அஜித் கூப்பிட்டுப் பாராட்டினார். விஜய் சாரும் `மனோகரை ரொம்பப் பிடிக்கும்'னு சந்தானம்கிட்ட சொல்லியிருக்கார்.

"நானும் கவிஞன், எழுத்தாளந்தான்... ஒரு சிறுகதையை முடிக்க நைட்டெல்லாம் அழுதேன்!" - 'லொள்ளு சபா' மனோகர்

தெருவுக்கு ஐம்பது பேர் வாய்ப்பு தேடி வராங்க. ஆனா, சரியா நடிக்கத் தெரியல. ஆடிஷன்ல `கோபமா பாருங்க, லைட்டா அழுங்க'னு  சொன்னா, தெரியல. `கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறனாம்'ங்கிற மாதிரி இருக்கு. ஒரு சீன் சொன்னா அதை அப்படியே பண்ணிப் பழகணும். அது எதுவுமல்லாம, திடீர் நடிகன் ஆசையில வந்துடுறாங்க. பலபேர் வாய்ப்புதேடி வந்து வழிதவறிப் போயிடுறாங்க. முக்கியமாக, பல பொண்ணுங்க தவறுதலா வழிநடத்தப்படுறாங்க. `பொண்ணுங்களா உஷாரா இருந்துக்கோங்க!" என்கிறார், அவர் பாணியில் கைகளைச் சுழற்றி! 

அடுத்த கட்டுரைக்கு