Published:Updated:

`அந்தப் படத்தைப் பார்க்கும்போது பயமாக இருக்கு! - பி.ஜே.பி வைரல் படத்தால் `சிரிச்சா போச்சு' ராமர் பதற்றம்

வே.கிருஷ்ணவேணி

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 75 முக்கிய வாக்குறுதிகளோடு வெளியாகியுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில், நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம், சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள் சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து அவற்றைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்ஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் சம்ஸ்கிருத பாடம் அதிகரிக்கப்படும், சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.  

`அந்தப் படத்தைப் பார்க்கும்போது பயமாக இருக்கு! - பி.ஜே.பி வைரல் படத்தால் `சிரிச்சா போச்சு' ராமர் பதற்றம்

மேலும், `ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டப்படும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை வெளியானதிலிருந்து, ராமர் படத்துக்குப் பதிலாக, விஜய் டி.வி `ராமர் வீடு' ராமரின் படத்தை வைத்து பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ராமரிடம் கேட்டபோது, 

`அந்தப் படத்தைப் பார்க்கும்போது பயமாக இருக்கு! - பி.ஜே.பி வைரல் படத்தால் `சிரிச்சா போச்சு' ராமர் பதற்றம்

``உண்மையில் பயமா இருக்குங்க. `ஆத்தாடி என்ன உடம்பீ' பாட்டு வந்தபோதும், 'என்னம்மா இப்டி பண்றீங்களே'மா போன்றவற்றை மக்கள் ரசித்து ஷேர் பண்ணியிருந்தாங்க. மக்கள் மத்தியில் நமக்கு நல்ல ரீச் இருந்தது என நினைத்தேன். அடுத்தடுத்து, மக்களுக்குப் பிடித்தது போல என்னால் முடிந்த அளவுக்கு நடிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 

இந்த நிலையில், நேற்றிலிருந்து என்னுடைய படத்தை வைத்து ட்ரெண்டாகும் விஷயத்தை நானும் கவனித்துத்தான் வருகிறேன். அரசியல் சார்ந்த விஷயமாக இருப்பதால் பாதிப்பு வருமோ என்கிற அச்சம் இருக்கு.

`அந்தப் படத்தைப் பார்க்கும்போது பயமாக இருக்கு! - பி.ஜே.பி வைரல் படத்தால் `சிரிச்சா போச்சு' ராமர் பதற்றம்

மேலும், இதனால் எனக்கு எதாவது பிரச்னை வந்திடுமோனு பயமா இருக்கு. நிறைய பேர் இதை ஜாலிக்காகப் பண்றாங்க. அது பெருசாகாம இருந்தா சந்தோஷம். இதை யார் யாரோ பண்றாங்க. கடைசியில் 'நான் தான் பண்றேன்'னு நினைச்சிடக் கூடாதுல்ல. பாலம் கட்டுறது, சிலை வைக்கிறது என பல விஷயங்களில் இந்த மாதிரி படங்கள் வெளியானது. முதலில் எதாவது பண்ணாலே எங்க தரப்பிலிருந்து பண்றதா நினைச்சுக்கிட்டாங்க. இப்போ மக்கள் பண்றாங்க என்பதைப் புரிஞ்சுக்கிட்டாலும் ஒரு பயம் இருக்குங்க.

என்னுடைய பெயர் ராமர் என்பதால் இதை வைரலாக்கியிருக்காங்க. நம்மை வைத்துப் பண்ணும்போது காமெடியனாக, கலைஞனாக ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தாலும், அரசியல் எனப் போகும்போது கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யுது. அரசியலில் நம்மப் பெயரைப் போட்டால் அவங்க பக்கம் எதாவது பிரச்னையாகிடும்''. என்றவரிடம், உங்கள் படத்தை இனியும் பயன்படுத்தலாமா ?' எனக் கேட்டதற்கு, 

``அரசியல் விஷயம் என்பதால் பண்ணாதீங்கனுதான் சொல்றேன்' என்றார் ராமர். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.